வழித்தடத்தை மறித்த கவுன்சிலர் மீது புகார்
2 Feb 2026, 4:51 pm
<p><strong>வழித்தடத்தை மறித்த கவுன்சிலர் மீது புகார்</strong></p>
<p>ஈரோடு, பிப்.2- வழித்தடத்தை மறி்த்து, கொலை மிரட்டல் விடுத்த பெண் கவுன்சிலர் மற்றும் அவரது கணவர் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டுமென ஈரோடு மாவட்ட ஆட்சியரி டம் மனு கொடுக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம், சிவ கிரி பேரூராட்சியில் தலைய நல்லூரிலிருந்து இலங்கை தமிழர்கள் குடியிருப்பிற்குச் செல்லும் பாதையின் குறுக்கே மரக்கட்டைகள் மற்றும் தென்னை மட்டைகளை கொண்டு பாதையை அடைத் துக் கொண்டிருந்தனர். கடந்த ஜன.9 ஆம் தேதி வார்டு கவுன்சிலர் சந்திராதேவி, அவரது கணவர் பாபு ராஜா மதன்குமார் மற்றும் சிலர் இப்பணியில் ஈடுபட்டனர். இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ் மற்றும் அப்பகுதியினர் தட்டிக் கேட்டனர். ஆனால், ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்கள் கொலை மிரட் டல் விடுத்தனர். பேசிப் பயனில்லை என காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து வந்த காவலர் ஆக் கிரமிப்பை போட்டோ எடுத்து சென்று விட் டார். இதுகுறித்து காவல் நிலையத்தில் எழுத்து பூர்வமாக புகார் அளிக்கப்பட்டது. புகார் பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையி லும், தற்போது வரை எந்தவித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. எனவே, உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் எம்.சசி ஆகி யோர், திங்களன்று ஆட்சியர் அலுவலகத் தில் மனு அளித்தனர்.</p>
