தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை கண்டித்து டிச.23 மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்!

12 Dec 2025, 3:12 pm
தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகளை கண்டித்து டிச.23 மாநிலம் தழுவிய மறியல் போராட்டம்!

சென்னை, டிச.12 - சிஐடியு  மாநில நிர்வாகக்குழு கூட்டம் டிசம்பர்  11, 12 ஆகிய தேதிகளில் மாநில துணைத் தலை வர் அ.சவுந்தரராசன் தலைமையில் சென்னை யில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன், பொருளாளர் எஸ்.ராஜேந்திரன், துணைத்  தலைவர் மாலதி சிட்டிபாபு, உதவி பொதுச் செய லாளர்கள் வி.குமார், கே.திருச்செல்வன், கே.ஆறு முகநயினார், இ.முத்துகுமார் உட்பட மாநில நிர்வாகிகளும், நிர்வாகக் குழு உறுப்பினர்களும் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

டிச.23-இல் மறியல்

ஒன்றிய மோடி அரசு, நவீன தாராளயமயக் கொள்கையின் ஒரு பகுதியாக சீர்திருத்தம் என்ற பெயரில் 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றி நவம்பர் 21 ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. சங்கம் வைக்கும் உரிமை, வேலைநிறுத்த உரிமை, பணி நிரந்தரம், சட்டப்படியான சம்பளம், முதலாளி - தொழிலாளி உறவற்ற, வரம்புகளற்ற  உழைப்புச் சுரண்டலை அனுமதிக்கவும், தொழிற் சாலைகளை திறந்தவெளி சிறைக்கூடங்களாக்க வும் நவீன அடிமைத்தன முறையை புகுத்தும் மிக  மோசமான சட்டத்தொகுப்புகளை கண்டித்து 23.12.2025 அன்று சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய  மறியல் போராட்டத்தை நடத்துவது என்று முடிவு  செய்யப்பட்டது. தொழிலாளர்களை பாதிக்கும் சட்டத் தொகுப்பு களை அமல்படுத்த மாட்டோம் என்று கேரள மாநில அரசு அறிவித்துள்ளது போல், தமிழ்நாடும்  சட்ட தொகுப்புகளை அமல்படுத்தக் கூடாது என்று  இக்கூட்டம் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

சங்பரிவாரை புறந்தள்ளிய மக்கள்

இந்து மக்களின் பக்தி, வழிபாட்டு உணர்வை அரசியல் ஆதாயத்திற்கு பாஜக பகடைக் காயாக  பயன்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் வேல்  யாத்திரை, முருகர் பக்தர் மாநாடு என்ற வடிவங் களில் பக்தி போர்வையில் சிறுபான்மையினருக்கு எதிரான உணர்வை மனரீதியிலாக பிளவை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பரங்குன்றம் சுப்பிர மணிய சுவாமி திருக்கோவிலுக்கு மேலே உள்ள  சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு சமைக்கின்றனர் என்று மதவெறி கும்பல் பிரச்ச னையை எழுப்பியது. இது அந்த பகுதி மக்களிட மும், பக்தர்கள் மத்தியிலும் எடுபடாத நிலையில்,  கார்த்திகை தீப நாளில் மலை உச்சியில் உள்ள கல்  தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று  இந்து தமிழர் கட்சியின் சார்பில் தாக்கல் செய்த  வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தது.

மலை உச்சியில் உள்ள தூணானது தீப தூண்  அல்ல, அது எல்லை கல் என்று வரலாற்று சான்று கள் மூலம் அறிஞர்கள் கூறுவதை கணக்கில் எடுக்காமல் அவசரகதியில் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இந்த உத்தரவில், மனுதாரர் உட்பட  10 பேர் தீபம் ஏற்றச் செல்ல அனுமதி பெற்று,  ஆயிரக்கணக்கான பாஜக, மதவெறி கும்பல் அந்த  பகுதியில்கூடி கலவரத்தை உருவாக்க முயற்சி  எடுத்தன.  இதில் தமிழ்நாடு அரசும், காவல்துறை யும் கலவரம் ஏற்படாமல் தடுத்து நிறுத்தியதும், மதுரை மக்களும், உழைக்கும் மக்களும் மதவெறி  சங்பரிவார் கூட்டத்தை புறந்தள்ளி மத ஒற்று மையை வெளிப்படுத்துவதும் பாராட்டுக்குரியது. இந்துத்துவா மதவெறி கும்பலின் விஷம பிரச்சாரத்தை முறியடிக்கவும். உழைக்கும் மக்க ளின் ஒற்றுமையை பாதுகாக்கவும் மதுரை மாநகர் மற்றும் மதுரை புறநகர் மாவட்டக் குழுக்கள் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவது என்று முடிவு  செய்யப்பட்டது.

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணிச்சுமை

டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை மற்றும்  கடை நிர்வாக பணிகளை செய்து வரும் ஊழியர் களிடம், நீதிமன்ற உத்தரவு என்ற பெயரில் காலி  மதுபாட்டில் திரும்ப வாங்க வேண்டும். அதற்கான  ஸ்டிக்கரை ஒவ்வொரு பாட்டிலிலும் ஒட்ட வேண்டும். கூடுதலாக ரூ.10 திருப்பி தர வேண்டும்.  காலி பாட்டிலை சேகரித்து ஒப்பந்ததாரரிடம் விற்க  வேண்டும்.  இவை அனைத்துக்குமான பதிவேடு கள் பராமரிக்கப்பட வேண்டும் என்று கூடுதல் பணிச் சுமையை டாஸ்மாக் நிர்வாகம் புகுத்தியுள்ளதை கண்டித்து டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதை, தமிழ்நாடு அரசு கணக்கில் எடுத்து இந்த திட்டத்தில் கடை  ஊழியர்களை பயன்படுத்தாமல் மாற்று வழி யில் அமல்படுத்த வேண்டும்.

நிரந்தரப் பணியிடங்களாக்குக!

பொது போக்குவரத்து பாதுகாப்பை கேள்விக் குறியாக்கும் வகையில் சென்னையில் மின்சார பேருந்துகள் தனியார் மூலம் இயக்குவதை கை விட வேண்டும். அரசு போக்குவரத்துக் கழகங்களில்  பணிபுரியும் காண்ட்ராக்ட் தொழிலாளர்களுக்கு சட்டப்படி போனஸ் வழங்கவும், வார விடுமுறை,  பி.எப்., இஎஸ்ஐ வழங்கிட வேண்டும். 10 ஆண்டு களாக காலியாக உள்ள பணியிடங்களை நிரந்தரப்  பணியிடங்களாக மாற்ற வேண்டும். கட்டுமானம், அமைப்பு சாரா ஓட்டுநர் உள்ளிட்ட  அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நல  வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்புகளின் ஜாக்டோ-ஜியோ ஜன வரி 6 ஆம் தேதி முதல் நடத்தவுள்ள  காலவரை யற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு சிஐடியு முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.