தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

10 Dec 2025, 4:08 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

நாய்களால் பலியாகும் கால்நடைகளுக்கு இழப்பீடு எஸ்.ஐ.ஆர். பணியால் தாமதம்

திருப்பூர், டிச. 10 - தெரு நாய்களால் பலியாகும் கால்நடைக ளுக்கு இழப்பீடு தரும் நடைமுறை எஸ்.ஐ. ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப் புத் திருத்தம் பணி காரணமாக தாமதம்  ஆகி வருவதாக தெரிகிறது. இது தொடர்பாக உயிரிழக்கும் கால்நடை களுக்கு இழப்பீடு பெற முயற்சிக்கும் விவ சாயிகள் தரப்பில் கூறியதாவது: தெரு நாய்க ளால் கால்நடைகள் உயிரிழந்த பிரச்சனை யில் சில மாதங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்பட்டது. அதன் பிறகு இழப்பீடு தரு வது நிறுத்தப்பட்டது. தெரு நாய்களால் கால்ந டைகள் உயிரிழப்பது தொடர்ந்து வரும் நிலை யில், அரசிடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கு  விவசாயிகள் தொடர்ந்து முயற்சி மேற் கொண்டு வருகின்றனர்.  இந்நிலையில் கால்நடைகளுக்கு இழப் பீடு தரும் நடைமுறை தாமதம் ஆவது குறித்து  விவசாயிகள் தரப்பில் மாவட்ட ஆட்சியர் மணிஷ் நாரணவரேவைத் தொடர்பு கொண்ட தாகவும், இது தொடர்பாக கால்நடை பராம ரிப்பு துறை மாவட்ட இணை இயக்குனர் வழி யாக தற்போதைய நிலவரத்தை அறிந்ததாக வும் விவசாயிகள் தரப்பில் தெரிவித்தனர். இதில், கடந்த காலத்தில், நாய்களால் உயிரிழந்த கால்நடைகளின் பிரேத பரிசோ தனை சான்றிதழை மட்டும் சமர்ப்பித்தனர், இப்போது கிராம நிர்வாக அலுவலர் சான்றி தழ்களுடன் தயாராகி வருவதாக தெரிவித் துள்ளனர். அத்துடன் எஸ்ஐஆர் வாக்காளர்  பட்டியல் சிறப்புத் திருத்தம் பணி காரணமாக வும் தாமதம் ஆவதாகத் தெரிகிறது எனவும்  தெரிவித்துள்ளனர். மேலும், அரசுத் தரப்பில் ஆடுகளுக்கு  ரூ.6000 இழப்பீடு வழங்கப்பட்டு வருவது, இனி சந்தை மதிப்பில் இழப்பீடு வழங்க தயா ராகி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், அரசுத்தரப்பில் இப்பிரச்சனையில் மேலும் தாமதப்படுத்தினால் நீதிமன்றத்திற்கு  எடுத்துச் செல்லவும் விவசாயிகள் தரப்பில் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பழங்கரையில் தொழிலாளர்  உதவி மையம் திறப்பு

திருப்பூர், டிச. 10 - திருப்பூர் பழங்கரையில் ரீடு தன்னார்வத் தொண்டு நிறுவ னத்தின் சார்பில் உலக மனித உரிமை நாளான டிசம்பர்  10ஆம் தேதி தொழிலாளர் உதவி மையம் தொடங்கி வைக்கப் பட்டது. இந்த தொழிலாளர் உதவி மையத்தில் புலம் பெயர்ந்த  தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் தொழிலாளர்களுக்கான  இணையவழி சேவை, வருங்கால வைப்பு நிதி, ஆதார் கார்டு,  ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்களை பெறுவதற்கும், சட்ட ரீதியான விழிப்புணர்வு பெறுவதற்கும் இந்த சேவை மையம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாக ரீடு அமைப்பினர் தெரிவித் தனர். ரீடு நிறுவன இயக்குநர் இரா.கருப்புசாமி இம்மை யத்தைத் தொடங்கி வைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் பட் டம்மாள் வரவேற்றார். திட்ட மேலாளர் நிர்மலா கருத்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேவம்பாளையம் அரசு  நடுநிலைப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் உள் ளூர் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். திருப்பூர் ஒருங்கி ணைப்பாளர் நைனான் நன்றி கூறினார்.

மின்சாதனங்கள் திருடப்படுவதை தடுக்க கோரிக்கை

உடுமலை,டிச.10- விவசாய நிலங்களில் இருக்கும் மின் மோட்டார்கள், மின்  ஒயர்கள் மற்றும் விளைபொருட்களை திருடும் திருடர்களை கைது செய்து, விவசாயிகளுக்கு பாதுகாப்பு தர வேண்டும்  என தளி காவல்நிலையத்தில் செவ்வாயன்று விவசாயிகள் புகார் அளித்துள்ளார். இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், எற்கனவே  மலை அடிவார பகுதியில் இருக்கும் விவசாயிகளின் விளை நிலங்களில் காட்டு விலங்குளால் பயிர்களுக்கும் விவசாயிக ளின் உயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இந்நிலை யில் சமீப காலமாக தோட்டசாலை மற்றும் விளைநிலங்களில் இருக்கும் ஆடு, மாடுகள், மின் மோட்டார்கள், மின் ஒயர்களை  திருடுவது தொடர்கதையாக இருக்கிறது. இதன் தொடர்ச்சி யாக தற்போது விளைநிலத்தில் இருக்கும் தேங்காய் உள்ளிட்ட விளை பொருள்களும் திருடப்பட்டு வருகிறது. இது குறித்து பல முறை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சி யர் தலைமையில் நடைபெறும் கூட்டங்களில் புகார் தெரிவித் தும், எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாமால் உள்ளது. திருடர் களை கைது செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டும்  என்று தெரிவித்தனர்.

நாளை மின்தடை உடுமலை,

டிச.10 -  பூலாங்கிணர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பூலாங்கிணர், அந்தியூர், சடையபாளையம், பாப்ப னூத்து, சுண்டக்காம்பாளையம், வாளவாடி, ராகல்பாவி,  தளி, மெடக்குபட்டி, ஆர்.வேலூர், குறிச்சிக்கோட்டை, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபு ரம் மற்றும் தென் குமாரபாளையம் ஆகிய பகுதிகளில்  மின்தடை ஏற்படும் என செயற்பொறியாளர் மூர்த்தி தெரி வித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.