முந்தய பக்கம்

வத்திராயிருப்பில் சமுதாய வளைகாப்பு திருவிழா

27 Feb 2026, 5:32 pm
வத்திராயிருப்பில்  சமுதாய வளைகாப்பு திருவிழா
<p><strong>வத்திராயிருப்பில் &nbsp;சமுதாய வளைகாப்பு திருவிழா</strong></p> <p>திருவில்லிபுத்தூர், பிப்.27- விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவல கத்தின் சார்பில் வெள்ளிக் கிழமையன்று தனியார் &nbsp;மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு திருவிழா நடை பெற்றது. இவ்விழாவிற்கு ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட வத்திரா யிருப்பு அலுவலர் க. வீர லட்சுமி தலைமை தாங்கி னார். வட்டார மருத்துவ அலு வலர் ஜெயராமன் கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தை கள் வளர்ச்சி திட்ட அலுவல கத்தின் சார்பில் மஞ்சள் குங்குமம் பழங்கள் மற்றும் தாம்பூலம் உள்ளிட்ட பொ ருட்களை வழங்கியதோடு கர்ப்ப காலத்தில் கடைப் பிடிக்க வேண்டிய நெறி முறைகள் குறித்து உரிய ஆலோசனை வழங்கினார். வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) உஷாகர்ப்பிணி தாய்மார்க ளுக்கு ஐந்து வகையான சாதங்களை வழங்கினார். விழாவில் குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலக மேற்பார்வையாளர்கள் வசந்தி ,பார்வதி, விஜய ராணி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சமு தாய நல பயிற்சிநர்கள் கலந்து கொண்டனர். 100 க்கும் மேற்பட்ட தாய்மார் கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram