சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
17 Feb 2026, 3:36 pm
<p><strong>சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி</strong></p>
<p>பாபநாசம், பிப்.17- தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணிகள் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை வட்டாரத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஒருங்கிணைப்பில் நடந்த நிகழ்ச்சியில், பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா பங்கேற்று, கர்ப்பிணி தாய்மார்களுக்கு தமிழக அரசின் சார்பில் சீர்வரிசை பொருட்களை வழங்கினார். இதில் அம்மாப்பேட்டை திமுக ஒன்றிய செயலர்கள் வடக்கு சுரேஷ், தெற்கு குமார், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் முகம்மது ரிபாயி, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.</p>
