தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இந்திய விடுதலைப் போர்: பூரண சுதந்திரமும் கம்யூனிஸ்டுகளும்! - கே.வசந்தன்

14 Aug 2026, 8:38 pm
இந்திய விடுதலைப் போர்:  பூரண சுதந்திரமும் கம்யூனிஸ்டுகளும்! - கே.வசந்தன்

இந்திய விடுதலைப் போர்: பூரண சுதந்திரமும் கம்யூனிஸ்டுகளும்! - கே.வசந்தன்

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ‘பூரண சுதந்திரம்’ (முழு விடுதலை) என்ற முழக்கத்தை முதன்முதலில் காங்கிரஸ் மேடைகளில் உரக்க ஒலிக்கச் செய்து, அதனை ஒருநிர்ப்பந்தமாக மாற்றித் தொடர்ச்சியாக வலியுறுத்தியவர்கள் கம்யூனிஸ்டுகள்தான். 1921 ஆம் ஆண்டிலேயே காங்கிரசின் மாநாடுகளில் இதற்கான கோரிக்கையை அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்த கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பும், அதன் தொடர்ச்சியான வரலாற்றுப் பின்னணியும் இந்திய விடுதலைப் போரின்வரலாற்றில் மிக முக்கியமான அத்தியாயங்கள்.

கம்யூனிஸ்டுகளின் முதல் தலையீடும் பூரண சுதந்திரக் குரலும்

முதல் உலகப் போருக்குப் (1914 - 1918) பின்இந்திய விடுதலைப்போர் ஒரு புதிய கட்டத்தில் நுழைந்தது. 1917 ஆம் ஆண்டு தோழர் லெனின் தலைமையில் மாபெரும் அக்டோபர் புரட்சி ரஷ்யாவில் வெடித்தது. அது உலகின் அரசியல் பலாபலனில் ஒருபுரட்சிகரமான திருப்பத்தைத் தொடங்கி வைத்தது.

1919 ஆம் ஆண்டு மாஸ்கோவில் கம்யூனிஸ்ட் அகிலம் உருவாக்கப்பட்டது. 1920 இல் தாஷ்கண்ட் நகரில் நாடுகடத்தப்பட்ட சில இந்திய புரட்சியாளர்களால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது. இந்தப் புதிய சூழலில் மற்ற பெரும்பான்மையான காலனிய நாடுகளில் நடந்தது போல் இந்தியாவிலும் காலனி ஆதிக்கத்தைஎதிர்த்தபோராட்டம் மிகப்பெரிய மக்கள் இயக்கமாகவும் அரசியல் இயக்கமாகவும் மாறியது.இந்த வரலாற்றுப் பின்னணியில், 1921 டிசம்பர் மாதம் அகமதாபாத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 36ஆவது மாநாட்டில், கம்யூனிஸ்ட் தலைவர்களான எம்.என்.ராய் மற்றும் அபானி முகர்ஜிஆகியோர் பெயரில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பூரண சுதந்திரத்திற்கான கோரிக்கையை முன் வைத்து அறிக்கை ஒன்று மாநாட்டில் கலந்து கொண்டோர் மத்தியில் சுற்றுக்கு விடப்பட்டது. இந்த நடவடிக்கையே இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரிய மேடையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்முதல் தலையீடாகும். அந்த மாநாட்டில் பிரதிநிதிகளாக பங்கெடுத்துக் கொண்ட மவுலானா ஹஸ்ரத் மொகானி, சுவாமி குமரானந்த் ஆகிய இருவரும் கம்யூனிஸ்டுகளின் சார்பில் முழுமையான விடுதலைக்கான தீர்மானத்தை முன்வைத்து முழங்கினர்.

காந்திஜி உள்ளிட்ட முக்கியமான மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆரம்பத்தில் இத்தீர்மானத்தை ஆதரிக்காததால் அப்போது அதை நிறைவேற்ற முடியவில்லை.ஆனால் 1920 களில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநாடுகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் இடைவிடாது பூரணசுதந்திரத்திற்கான கோரிக்கை முன் வைக்கப்பட்டது. காலனி ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து இந்திய மக்களின் சார்பாக சமரசமற்ற போராட்டம் மூலமே இந்தியாவின் அடிமை நிலையை மாற்ற முடியும் என்பதே கம்யூனிஸ்டுகளின் உறுதியான நிலைப்பாடாக இருந்தது.

காங்கிரஸ் மாநாடுகளும் லாகூர் தீர்மானமும்

1920 களிலிருந்த தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாகத்தான் காங்கிரஸ் மேடைகளில் பூரண சுதந்திரத்திற்கான கோரிக்கை படிப்படியாக வலுவடைந்தது. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினரும் அதிகஅளவில் இந்திய விடுதலைப் போரில் பங்கெடுத்தனர். இந்தப் பின்னணியில் தான் காங்கிரஸ் கட்சி கல்கத்தாவில் நடைபெற்ற அதன் 43 ஆவது மாநாட்டில்(டிசம்பர் 28, 1928 முதல் ஜனவரி 1, 1929 வரை) டொமினிக் அந்தஸ்துக்கான கோரிக்கை தீர்மானத்தையாவது முதன்முதலாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மாநாட்டில் பூரண சுதந்திரகோரிக்கைக்கான தீர்மானம் தீவிரமாக முன்வைக்கப்பட்டாலும் தோல்வியையே சந்தித்தது.

ஆனால், இந்த மாநாட்டிற்கு பின் நடந்த லாகூர் மாநாட்டில் நிலைமை மாறியது. 1929 டிசம்பர் 26 முதல்1930 ஜனவரி 1 வரை லாகூரில் நடைபெற்ற அதன் 44ஆவது அமர்வில், ஜவஹர்லால் நேரு தலைமையில் முதன் முதலாக அதிகாரப்பூர்வமாக பூரண சுதந்திர தீர்மானம்நிறைவேற்றப்பட்டது. அமர்வுக்கான நிகழ்ச்சி நிரலை தீர்மானிக்கும் கமிட்டியில் காந்திஜிடிச.27 அன்று இத்தீர்மானத்தை முன்மொழிந்தார். காலனிய அடிமைப்படுதலுக்கு எதிரான விடுதலையே காங்கிரசின் இலட்சியம் என்று டிச.29 அன்று தனது தலைமை உரையில் பிரகடனப்படுத்தினார். அதன் பிறகு ஜன.31 1929-ல் பொது அமர்வில் அத்தீர்மானம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இத்தீர்மானத்தின் அடிப்படையில் 1930 ஜன.26-ஆம் நாளை பூரண சுதந்திர நாளாக காங்கிரஸ் எழுச்சியோடு கடைப்பிடித்தது. அன்றைய தினம் லட்சக்கணக்கான இந்தியர்கள் பூரண சுதந்திரத்தின் அடையாளமாக காங்கிரஸ் கொடியை ஏற்றி, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கடுமையான அடக்கு முறையை மீறிபூரண சுதந்திரத்திற்காக போராடுவதற்கான உறுதிமொழியை எடுத்தனர். காங்கிரஸ் கட்சி உதயமாவதற்கு முன்னரே தாதாபாய் நௌரோஜி நம் நாட்டின்செல்வம் பிரிட்டிஷாரால் கொள்ளையடிக்கப்படுவதையும், அந்த கொள்ளைக்குப் பின்னால் இருந்த அரசியல் பொருளாதார கூறுகளையும் தெளிவாக டுத்துரைத்தார். காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகவும் மிதவாதியாகவும் அறியப்பட்ட தாதாபாய் நௌரோஜி, பூரண சுதந்திரம் என்றமுழக்கத்திற்கு தனது முழு ஆதரவையும் வழங்கினார்.இதற்கெல்லாம் பின்புலமாக இருந்தது அன்று கம்யூனிஸ்டுகள் முன்வைத்த முழு விடுதலைக்கான கோஷமே.

மீரட் சதிவழக்கும் கம்யூனிஸ்டுகளின் தொடர் போராட்டங்களும்

கம்யூனிஸ்டுகள் மீது நாடெங்கும் பரவலான அடக்குமுறை பிரிட்டிஷாரால் ஏவிவிடப்பட்டது. லாகூர் மாநாட்டுக்குமுன்னரே மார்ச் 20, 1929 அன்றுமீரட் சதிவழக்கு தொடுக்கப்பட்டது. இந்தியத் துணைக்கண்டத்தையும் தாண்டி ஏகாதிபத்தியத்தை எதிர்த்துபோராடும் இயக்கங்களின் கவனத்தை இந்த வழக்கு ஈர்த்தது. வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டகம்யூனிஸ்டுகளை காந்தி சென்றுசந்தித்தார். மோதிலால் நேருவும், ஜவஹர்லால் நேருவும் அவர்களுக்கு ஆதரவாக நின்றனர். சிறைக்குள் இருந்த போதும் அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திலிருந்து இந்தியாபூரண சுதந்திரம் அடையவேண்டும் என்று கோரினர்.

இதே காலக் கட்டத்தில்தான் டிசம்பர் 16, 1930-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் உருவாக்கப்பட்ட “பொது மேடைக்கான செயல்திட்டம்” என்றஆவணம், கம்யூனிஸ்ட் அகிலத்தால் வெளியிடப்பட்ட அதன் பத்திரிகையில் பிரசுரமானது. இன்னும் தீவிரமான போராட்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியிடமிருந்து கம்யூனிஸ்டுகள் எதிர்பார்த்தனர். பூரணசுதந்திர உறுதிமொழி ஏற்பு நாளை கடைபிடித்த பிறகு காங்கிரஸ் கட்சி ஒத்துழையாமை இயக்கத்தையும், ஏப்ரல்1930-ல் காந்திஜி தலைமையில் உப்புச்சத்தியாக்கிரக போராட்டத்தையும் மேற்கொண்டது. இந்தப்போராட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

இந்தப் போராட்டப் பின்னணியில் தான் மார்ச்26-31, 1931 கராச்சி நகரில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 45 ஆவது மாநாடு நடைபெற்றது. சர்தார் வல்லபாய் பட்டேல் தலைமை தாங்கிய இந்த மாநாட்டில், மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் பொருளாதார சமூக முன்னேற்றத்திற்காகவும் முக்கியமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கராச்சி மாநாடு 14அடிப்படை உரிமைகளை வரையறுத்துச் சொன்னதுடன், அதில் 9 ஆவதாக சுதந்திர இந்தியாவின் அரசுஅனைத்து மதங்களின்பாலும் நடுநிலையை வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. 1932 ஜனவரியில்காங்கிரஸ் கட்சி சட்டவிரோதமானது என்று பிரிட்டிஷாரால் அறிவிக்கப்பட்டது. ஏற்கெனவே கம்யூனிஸ்ட்கட்சியினரின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டிருந்தாலும் 1934 ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக தடைசெய்யப்பட்டது. இந்தத் தடையானது 1942 ஜூலை மாதம்வரை நீடித்தது.

வகுப்புவாத அரசியலும் இந்துத்துவா சக்திகளின் பங்கும்

1920 களிலிருந்தே அரசியல் சூழலில் ஏற்பட்ட மாற்றங்களின் ஊடாகவே திரைமறைவில் வகுப்புவாத நடவடிக்கைகளும் தலை தூக்கின. 1930 களின் ஆரம்ப கட்டங்களில் நடைபெற்ற வட்ட மேஜைமாநாடுகளை முன்னிறுத்தி முகமது அலி ஜின்னா தலைமையிலான முஸ்லிம் லீக் கட்சி வகுப்புவாத பிரிவினைஅரசியலுக்கு தூபமிட்டது. இதன் தொடர்ச்சியாக ஜின்னாவின் முஸ்லிம் லீக் இரண்டு நாடுகள் என்ற கருத்தாக்கச் சூழலுக்குள் தன்னைஇருத்திக் கொண்டது. ஆனால், இது ஏதோ முஸ்லிம்வகுப்புவாதத்தால் மட்டும் முன்வைக்கப்பட்டது என்று புரிந்துகொள்ளக்கூடாது. இந்து பெரும்பான்மை வகுப்புவாதசக்திகளான ஹிந்து மகா சபா மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகளும் இதே இரண்டுநாடுகள் கருத்தை முன்வைத்தன.

1920 களிலிருந்தே இந்துத்துவா சக்திகள் தொலைநோக்கு பார்வையுடன், திட்டமிட்டு அரசியல் களத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கின. 1915 ஆம்ஆண்டு தொடங்கப்பட்ட அகில பாரதிய ஹிந்து மகா சபா தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்தியது. 1925 இல் கேசவ்பலிராம் ஹெட்கேவார் தலைமையில் ராஷ்டீரிய சுயம் சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) நிறுவப்பட்டது. ஆரம்பித்த போது ஆர்எஸ்எஸ் தன்னை ஒருகலாச்சார அமைப்பு என்று சொல்லிக் கொண்டது. 1924 இல் விநாயக் தாமேதர் சாவர்க்கர் அந்தமான்சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அவர்தான் ஹிந்து மகா சபை என்ற அமைப்பை ஒரு அரசியல் கட்சியாகஉருமாற்றியவர். ஆனால், காலப்போக்கில் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்துத்துவா ஆதரவாளர்களின் செயல்பாட்டு மேடையாக ஆர்எஸ்எஸ் உருப்பெற்றது. விடுதலைக்குப் பிறகு ஆர்எஸ்எஸ் திட்டமிட்டுஉருவாக்கிய அமைப்புகள் தான் பாரதியஜன சங் (1951) கட்சியும், பின்னர் பாரதிய ஜனதா கட்சியும் (1980) ஆகும். 2025 இல் தொடங்கி ஆர்எஸ்எஸ் தனது நூற்றாண்டு விழாவை மிகுந்த ஆரவாரத்துடன்கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

திரிபுவாதப் பிரச்சாரமும் உண்மையும்

2014 இல் மோடி அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் அமர்ந்த பின் கார்ப்பரேட் ஆதரவுடன் தீவிரமாகவிரிவடைந்துள்ள இந்துத்துவா அரசியல் சங்பரிவாரின் செல்வாக்கை அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் காவிப்படை நாட்டின் விடுதலைப் போராட்டத்தில்நாங்களும் முக்கியப் பங்காற்றினோம் என்று தங்களுக்கு ஒரு மறு அடையாளத்தை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லாகூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட “பூரண சுதந்திர” தீர்மானத்தை சங் பரிவாரங்கள் ஆதரித்தன என்றும், ஜன. 26, 1930 அன்று கடைப்பிடிக்கப்பட்ட “பூரணசுதந்திர நாளில்” கொண்டாட்டத்தில் ஆர்எஸ்எஸ் பங்கெடுத்துக் கொண்டது என்றும் பேசிவருகிறார்கள். ஆனால், டாக்டர்.கோபால் பர்சாத் “தேசிய இயக்கமும், ஆர்எஸ்எஸ்சும்” என்ற கட்டுரையில் ஜன 26, 1930 அன்று ஆர்எஸ்எஸ் இன் தலைவர்கள் அந்த அமைப்பின் ஊழியர்களை, ஆதரவாளர்களை காவிக் கொடியை ஏற்றுமாறு அறைகூவல் விடுத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் 80ஆவது சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி வீடுதோறும் மூவர்ண தேசியக்கொடியை ஏற்றுமாறு அறைகூவல் விடுத்துள்ளார். இந்தக் காவிக் கொடிக்கும் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த மக்கள் பேரெழுச்சிக்கும் எந்தச்சம்பந்தம் இல்லை என்பதே வரலாறு.

காலனிய அடிமைத்தனத்திற்கு எதிரான, ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிரான போராட்ட அடித்தளத்திலிருந்து உருவானதல்ல சங்பரிவார் அமைப்பு. மாறாக, பிரிட்டிஷ் ஆட்சியாளரின் ஆதரவோடு, அனுசரணையோடு பிறந்ததுதான் ஆர்எஸ்எஸ். ஆர்எஸ்எஸ் இரண்டாவது தலைவரான எம்.எஸ்.கோல்வால்கரின்“சிந்தனைக் கொத்து” நூலின் 138 ஆம்பக்கத்தில் பின்வருமாறு கிண்டலாகக் கூறுகிறார்:

“தேசியத்திற்கும் தேசப்பற்றுக்கும் இணையாக பிரிட்டிஷ் எதிர்ப்பு என்பது சமப்படுத்தப்பட்டது. இந்தப்பிற்போக்குத்தனமான பார்வை விடுதலைப் போராட்டக் காலம் முழுவதும் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தியது”.

இது உண்மையாகவே ஒரு வகையான இந்துத்துவாஉள்ளடக்கம் சார்ந்த கருத்தாகும். நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த இந்துத்துவா கூட்டம் தங்களது சொந்தநிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்திக் கொண்டே, அரசு அதிகாரத்தை முற்றாக கைப்பற்றுவதற்கு தொடர்ந்து இடைவிடாமல் முன்னேற முயற்சிக்கிறது. இந்துத்துவாவின் சித்தாந்த அடித்தளம் மதம் சார்ந்தது மற்றும் சாதி அடிப்படையிலான பிரிவினை அரசியல் சார்ந்தது ஆகும். தனது பழமையானஅரசியல் சித்தாங்களை வைத்துக் கொண்டே நவீன சூழலில் ஏற்பட்டிருக்கும் சவால்களை சந்திக்க முற்படுகிறது. இந்த நவ பாசிசப் போக்கினை முறியடித்து, மதச்சார்பற்ற ஜனநாயக இந்தியாவைப் பாதுகாப்பதற்கானதொடர் போராட்டமே இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது. அதுவே 80ஆவது சுதந்திர தின செய்தியாகும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.