தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

எரிச்சலை கொட்டி தீர்த்த தினமலர்

1 Jan 2026, 4:14 pm
எரிச்சலை கொட்டி தீர்த்த தினமலர்
<p>திருப்பூர், ஜன.1- திருப்பூர் மாநகரில் நிலவிவரும் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி இணைந்து புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந் நிலையில், பாரதிய ஜனதா கட்சி யின் ஊது குழலாக செயல்படும் தினமலர் நாளிதழுக்கு கம்யூ னிஸ்டுகள் போராட்டம் நடத்தி யதை பொறுக்க முடியாமல், விஷ மத்தனமாக தலைப்பிட்டு செய்தி என்று தனது எரிச்சலை கொட்டி தீர்த்துள்ளது. குறிப்பாக திருப்பூர் மாநக ராட்சியில் கடந்த இரண்டு மாத கால மாக குப்பை பிரச்சனை தீராத நெருக்கடியாக தொடர்ந்து வருகி றது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பாறைக்குழிகளில் குப்பை கொட்ட செல்லும் மாநகராட்சி வாக னங்களுக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். இத னால் மாநகரில் குப்பையை அகற்ற முடியாமல் பல்வேறு பகுதிகளில் குப்பை பெருமளவு தேங்கி இருந் தது. குப்பை பிரச்சனை நெருக்கடி யாக மாறிய நிலையிலேயே மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந் திய கம்யூனிஸ்ட் கட்சியும் இப்பிரச் சனையை தீர்க்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். &nbsp;குப்பை பிரச்சனை தற்போ துள்ள மாநகராட்சி நிர்வாகத்தின் நிர்வாகக் கோளாறு மட்டுமின்றி, கடந்த 30 ஆண்டு காலமாக அடுத்த டுத்து நிர்வாகத்துக்கு வந்தவர்க ளுக்கும் இதில் பொறுப்பு இருக்கி றது. ஆரம்பக் கட்டத்தில் இருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வாங்காததால் மொத்த மாக அனைத்து வகையான குப்பை யையும் சேகரித்து பாறைக்குழிக ளில் கொட்டியதால் இப் பிரச்சனை கை மீறி போய் உள்ளது. &nbsp;திடக்கழிவு மேலாண்மை திட் டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், குப்பை பிரச்சனையில் போராடும் மக்கள் மீது அடக்கு முறை நடவடிக்கையை ஏவக்கூ டாது, இப் பிரச்சனையில் நிரந்தர தீர்வு காண தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. &nbsp;அப்போதெல் லாம் கண்ணை மூடி மௌன விர தம் இருந்த தினமலர் நாளிதழ், கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் நடத் திய உடன் விஷமத்தனமாக எழுது கிறது.&nbsp;&nbsp;</p> <p>குறிப்பாக குப்பை பிரச்சனை நெருக்கடியாக மாறிய நிலையில் இருந்து அனேகமாக தினமும் இப் பிரச்சனையை, ஊடக பொறுப்பு ணர்வற்று, தினமலர், உள்நோக் கத்துடனேயே செய்திகளை வெளி யிட்டு வந்தது. அதுவும் பாரதிய ஜனதா கட்சியினுடைய நோக் கத்தை நிறைவேற்றும் விதத்தில் குப்பை பிரச்சனையில் தினமலரின் &nbsp;செய்தித் தன்மை இருந்தது. &nbsp;இடு வாய் ஊராட்சி சின்ன காளிபாளை யம் பகுதியில் மாநகராட்சி இடத் தில் குப்பை கொட்ட கிராம மக்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப் பாற்பட்டு, ஒன்றுபட்டு எதிர்ப்பு தெரி வித்த நிலையில், பாஜக வினர் இப்பிரச்சனையில் அரசியல் ஆதா யம் தேட முயன்றனர். அக்கட்சியின் முன்னாள் தலை வர் அண்ணாமலை மக்கள் போராட் டத்தை பயன்படுத்தி பரபரப்பு ஏற்ப டுத்தி, ஆதாயம் தேட முயன்றார். ஒன்றியத்தை ஆளும் கட்சியின் ஒரு தலைவர் என்ற முறையில், ஏற்றுமதி நகரமான திருப்பூரில் குப்பை பிரச்சனையை தீர்ப்ப தற்கு ஒன்றிய அரசு என்ன விதமான உதவிகளைச் செய்ய முடியும், அதற்கு என்னென்ன பணிகள் செய் திருக்கிறோம் என்று அண்ணாம லையோ அல்லது பாஜகவோ ஒரு &nbsp;வார்த்தை கூட சொல்லவில்லை. மாறாக குப்பை பிரச்சனை தீர்வ தற்கு, வரக்கூடிய சட்டமன்றத் தேர் தல்தான் தீர்வு?! என்று வெட்கமே இல்லாமல் தனது அரசியல் நோக் கத்தை வெளிப்படுத்தி சென்றார். ஆனால் பாஜகவின் ஊதுகுழ லாக செயல்படும் தினமலர் ஏன் இதைப்பற்றி எழுதவில்லை? ஏற்று மதி நகருக்கு ஒன்றிய அரசு என்ன &nbsp;செய்தது என்பதை ஏன் பட்டியலிட வில்லை? &nbsp;எனவே இதை எழுதுவ தற்கு துணிவு இல்லாத தினமலர், கம்யூனிஸ்டுகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்த பார்க்கிறது. வழக் கமாக கம்யூனிஸ்டுகள் நடத்தும் போராட்டங்களுக்கு ஒரு பத்தி அள வுக்கு கூட இடம் ஒதுக்காத தின மலர், இந்த ஆர்ப்பாட்டத்தை பற்றி &nbsp;கால் பக்கத்திற்கு செய்தி எழுது கிறது. &nbsp;இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், திடக்கழிவு மேலாண்மை பிரச் சனையில் திருப்பூர் மாநகராட்சி என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசு செய்ய வேண்டியது என்ன? ஒன்றிய அரசு இதில் ஏற்றுமதி நக ரம் என்ற முறையில் இப் பிரச்சனை தீருவதற்கு உதவ வேண்டும் என புள்ளி விவர ஆதாரங்களு டன், தெளிவான வாதத்தை முன் வைத்து பேசினார். திருப்பூர் குப்பை பிரச்சனை தீர வேண்டும் என்று ஒரு பொறுப்புள்ள மக்கள் &nbsp;நாளிதழாக இருந்தால் அந்த விப ரங்களை ஒரு சிறு பகுதியாவது வெளியிட்டு இருக்க வேண்டும். ஆனால் தினமலருக்கு குப்பை பிரச்சனை மீது அக்கறையில்லை, &nbsp;பாரதிய ஜனதா கட்சியைப் &nbsp;போலவே, இதை வைத்து தனது &nbsp;எஜமானனின் குறுகிய அரசியல் &nbsp;நோக்கத்தை எப்படி எழுதுவது &nbsp;என்று தனது எரிச்சலை கொட்டித் தீர்த்து இருக்கிறது. &nbsp;உண்மையின் உரை கல் என தனக்குத்தானே பெயர் சூட்டி இருக் கும் தினமலர் உரசிப் பார்த்தால் உதிர்ந்து போகும் களிமண் உருண் டையாகத்தான் இருக்கிறது!! -வேதன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.