தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்களுக்கான போராட்டத்தில் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் - கே.காமராஜ் பேச்சு

yesterday
மக்களுக்கான போராட்டத்தில் வரலாறு நெடுகிலும்  கம்யூனிஸ்ட்டுகள் - கே.காமராஜ் பேச்சு

மக்களுக்கான போராட்டத்தில் வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் - கே.காமராஜ் பேச்சு

கோவை, ஜுலை 8 – பஞ்சாலைத் தொழிலாளர்களின் உரி மைக்காக போராடி, ஆலை நிர்வாகத் தின் குண்டர்களால் படுகொலை செய் யப்பட்ட உப்பிலிபாளையம் தியாகி முத்துவின் 72-ஆம் ஆண்டு நினைவு தினம் செவ்வாயன்று அனுசரிக்கப்பட் டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உப்பிலிபாளையம் பேருந்து நிறுத்தத்தி லிருந்து தியாகி முத்து நினைவு மேடைக்கு ஊர்வலமாக சென்று மல ரஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவுத் திடலில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப் பினர் கே.பாண்டியன், சிபிஐ மண்டல செயலாளர் சண்முகம் ஆகியோர் கட் சிக்கொடிகளை ஏற்றினர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் ஏ.தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார்.

சிபிஐ கிளைச் செயலாளர் எம்.தங்க வேல் வரவேற்றார்.

இதில் சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் கே.காமராஜ், சிபிஐ மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற உறுப்பினருமான கே.மாரி முத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்நிகழ்வில் கே.காமராஜ் பேசுகை யில், வரலாறு நெடுகிலும் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைக் காக்க செங்கொடி இயக்கத்தின் எண்ணற்ற தோழர்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர்.

ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒடுக்க காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் படுகொலை செய்யப்பட்டனர்; பஞ் சாலை முதலாளிகளின் அடக்குமுறை மற்றும் பாலியல் வன்புணர்வுக்கு எதி ராக போராடிய 4 சின்னியம்பாளையம் தியாகிகள் பொய் வழக்கில் தூக்கி லிடப்பட்டனர்.

அரசு அறிவித்த குறைந்த பட்ச ஊதியத்தை நடைமுறைப்படுத்தக் கோரி வால்பாறை தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத் தின் போது, காவல்துறை நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 5 தோழர்கள் மாண்டனர்.

ஈரோடு மாவட்டம் பள்ளி பாளையத்தில் கந்துவட்டி கொடு மையை தட்டிக்கேட்ட தோழர் வேலுச் சாமி கொலை செய்யப்பட்டார்.

இந்த தியாக வரலாற்று தொடர்ச்சியாகவே, இன்றைக்கும் வேலை நேரம், சட்ட உரி மைகள், முறையான சம்பளம் மற்றும் சங்கப் பதிவு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறோம், சாம்சங் தொழிலாளர்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்; தென் கொரியாவில் இதே வேலைக்கு ரூ.4 லட்சம் வழங்கப்படும் நிலையில், இந்தியாவில் வெறும் ரூ.40,000 மட்டுமே வழங்கி உழைப்புச் சுரண்டல் நடப்பதை எதிர்த்துச் செங்கொடி இயக்கம் சம ரசமின்றி தொடர்ந்து களமாடி வருகி றது.

தமிழக மக்களின் அடிப்படைப் பிரச் சினைகளுக்காக போராட சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்எல்) ஆகிய கட்சிகள் இணைந்து ‘இடது முன்னணி’ என்ற பலமான அரசியல் மாற்றை உருவாக்கி யுள்ளன. தியாகி முத்துவின் நினைவாக இந்த இடது முன்னணியை பலப்ப டுத்த சபதம் ஏற்போம், என்றார்.

இந்நிகழ்வில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், சிபிஐ மாவட்டச் செயலாளர் சி.சிவசாமி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.சுரேஷ், வி.தெய்வேந்திரன், சிங்கை நகரச்செயலாளர் ஆர்.மூர்த்தி, பீளமேடு நகரச்செயலாளர் ஏ.மேகநா தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர். முடிவில், சிபிஐ கிளைச் செயலாளர் பி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.