தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிமைச் சங்கிலியை உடைத்த கம்யூனிஸ்ட் - உ.வாசுகி

10 Oct 2026, 8:57 pm
அடிமைச் சங்கிலியை உடைத்த கம்யூனிஸ்ட் - உ.வாசுகி

அடிமைச் சங்கிலியை உடைத்த கம்யூனிஸ்ட் - உ.வாசுகி

பண்ணையடி மைத்தனத்தின் இறுதித் தலைமுறையைச் சேர்ந்தவராக, அடக்குமுறை, ஒடுக்குமுறை, சாணிப்பால், சவுக்கடிஉள்ளிட்ட அனைத்தையும் சந்தித்து, கம்பீரமான கம்யூனிஸ்டாக உருவெடுத்த அருமைத் தோழர் பி.எஸ்.டி.யின் வாழ்க்கை வரலாறு அனைவருக்கும்உத்வேகம் ஊட்டக்கூடியது. அப்பட்டமான சாதிய ஒடுக்குமுறையையும் கொடும் உழைப்புச் சுரண்டலையும்நேருக்கு நேர் சந்தித்தவர் அவர்.

சினிமாப் பண்ணையார்கள் அல்ல

இன்றைய தலைமுறை, பண்ணையார்களின் வில்லத்தனத்தைச் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறது. அங்கே அன்பான பண்ணையார்களும்,அவர்களுக்காக உயிர் கொடுக்கத் துணியும் பண்ணையாட்களும், கொடுமை நடந்தால் பார்த்துக்கொள்ளும்ஹீரோவும், பார்வையாளர்களாக நிற்கும்விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்க

பி.எஸ்.தனுஷ்கோடி உள்ளிட்ட கம்யூனிஸ்டுகளே. இதை இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும். கட்சி உறுப்பினர்கள் பலரும் இந்த வரலாற்றை முழுமையாக உள்வாங்க வேண்டியுள்ளது. அது நமக்கு ஊக்கமளிக்கும். அதே சமயம், அன்றைக்கிருந்த நிலைமையும் சவால்களும் வேறு; இன்றைய நிலைமையும் சவால்களும் வேறு. அன்று நடந்ததை அப்படியே நகலெடுத்து நடைமுறைப்படுத்த முடியாது. திட்டவட்டமான சூழலைத் துல்லிய

மாக ஆய்வு செய்வதுதான் இயக்கவியலின் சாராம்சம்.

உதாரணமாக, கிராமப்புற வர்க்க எதிரியாகப் பெருநில உடைமையாளர் மட்டுமே இருந்த நிலை அன்று. நவ தாராளமயக் கொள்கைகளின் அமலாக்கத்தால் ஏற்பட்டமாற்றங்கள், வேளாண்துறையில் முதலாளித்துவ வளர்ச்சி போன்றவை இன்று கிராமப்புறப் பணக்கார வர்க்கங்களின் கூட்டணியை உருவாக்கியுள்ளன. கிராமப்புறப் பாட்டாளி வர்க்கம் அதிகரித்துள்ளது. ஊரகத் தொழிலாளர்களை அணிதிரட்டும் பணியின் மூலம்தான் கிராமப்புறங்களில் கட்சியின் முகத்தோற்றத்தை மாற்ற முடியும்.

விவசாயிகளின் பம்ப் செட்டுகளுக்கான இலவச மின்சாரம் பல கட்டப் போராட்டங்களுக்குப் பிறகே கிடைத்தது. விண்ணப்பித்துக் காத்துக் கிடப்பவர்கள் ஏராளமானோர். தற்போது ஸ்மார்ட் மீட்டர் விவகாரம், மின் விநியோகத் தனியார்மயம் போன்ற போக்குகளுக்கு இடையே அது தொடருமா என்பது பெரும் கேள்வி. இது அரசின் கருணையைப் பற்றியதல்ல;விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கையாகும்.

வர்க்க அரசியலும் கிராமப்புற அணிதிரட்டலும்

அன்றாட அரசியல் மிகவும் முக்கியம். ஆனால் அதனை அடிப்படை வர்க்க அரசியல் நிலைப்பாட்டிலிருந்தே மதிப்பீடு செய்யவும் எதிர்வினையாற்றவும் வேண்டும். தமிழகத்தை இரு துருவ அரசியலுக்குள் சிக்கவைக்க இதர சக்திகள் எடுக்கும் முயற்சிகளை உறுதியாகப் புறந்தள்ள வேண்டும். தமிழக உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் அந்த வட்டத்துக்கு வெளியேதான் உள்ளன. தோழர் பி.எஸ்.டி. அவரது காலத்தில் அத்தகைய வர்க்க அரசியலில் உறுதியாக நின்றார். சட்டமன்றத்திலும் போராட்டக் களத்திலும் உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் மீதே அவரது கவனம் குவிந்திருந்தது.

சமத்துவமின்மையும் பாலினப் பரிமாணமும்

ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில், ஏற்றத்தாழ்வற்ற சமூகத்தைப் படைக்கப் பி.எஸ்.டி. உறுதி பூண்டிருந்தார். ஆனால்ஏகாதிபத்திய உலகமயமாக்கல் காலத்தில், நவ தாராளமயக் கொள்கைகள் ஏற்றத்தாழ்வு

களைத் தீவிரமாக வளர்த்துவிடுகின்றன. உலக சமத்துவமின்மை அறிக்கை 2026இந்தியாவைப் பற்றி என்ன கூறுகிறது? மேல்மட்ட 10% பேர் தேசிய வருமானத்தில் 58%, தேசியச் செல்வத்தில் 65% வைத்துள்ளனர். அடிமட்ட 50% பேர் தேசிய வருமானத்தில் 15% மட்டுமே வைத்துள்ளனர்; தேசியச் செல்வத்தில் அவர்களின் பங்கு மிகக்குறைவானது.முதலாளித்துவக் கட்சிகள் வளர்ச்சி பற்றிப் பேசுவதோடு நின்றுவிடுகின்றன. வளர்ச்சியின் பலனைப் பகிர்வது பற்றியும், வளர்ச்சியைச் சாத்தியமாக்கிய தொழிலாளர்விவசாயிகளுக்குக் கிடைக்கும் பங்கு குறித்தும் கேள்வி எழுப்புவது கம்யூனிஸ்டுகளே.சமத்துவமின்மைப் பிரச்சினையில் பாலினப் பரிமாணமும் உள்ளது. உழைப்பாளிகளின் மொத்த வருமானத்தில் பெண்களின் பங்கு 18 சதவிகிதம் மட்டுமே. குறைவான வருமானம் கிடைக்கும் வேலைகளில் பெண்கள் அதிகம் உள்ளனர்என்பது இதற்குஒரு முக்கியக் காரணம். பெண்களின் ஊதியமற்ற உழைப்பு கணிசமானது; அது கணக்கிலேயே வருவதில்லை. பெண்களின் வீடு சார்ந்த உழைப்புமதிப்பிடப்பட்டுச் சமூகத்தின் கவனத்துக்கு வர வேண்டும்.

ஜனநாயகமும் இளைஞர் போராட்டங்களும்

கட்சியின் வழிகாட்டுதலில், தடைகளையும் அடக்குமுறையையும் தாண்டி, எத்தனையோ போராட்டங்களைப் பி.எஸ்.டி. நடத்தியுள்ளார். போராடும் உரிமையைப் பாதுகாக்கக் கம்யூனிஸ்டுகள் செய்த தியாகம் சிறிதல்ல. போராட்டங்கள் ஒடுக்கப்பட்டால் அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்போம். ஜனநாயகமே ஒடுக்கப்படுவதைத்தற்போது காண்கிறோம்; அதைக் காக்கப் போராடும் நிலையில் உள்ளோம்.குறிப்பாக, ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் எல்லையற்ற அதிகாரம் அளிக்கப்பட்ட தேர்தல்ஆணையம், வாக்குரிமை எனும் ஜனநாயகத்தைச் சிதைப்பதற்குச்செயல்பட்டிருக்கிறது.ஆணையத்துக்குள்ளேயும் ஜனநாயகம் இல்லை. தலைமைத் தேர்தல் ஆணையர் ஆட மகுடி வாசித்தவர்கள் யார்என்ற கேள்வி வலுவாகஎழுந்துள்ளது.

கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும், தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பன போன்றகோரிக்கைகள் தனிநபர் சார்ந்தவை அல்ல;அமைப்புமுறை சார்ந்தவை. அமைப்புமுறையின் மீது இளைய தலைமுறை நம்பிக்கை இழந்துள்ளது. ‘ஜென்-சி’ என்றுஒட்டுமொத்தமாக இவர்களுக்குப் பெயரிட்டாலும், ஒரு தலைமுறை என்பது ஒரு வர்க்கமல்ல. சமூக-பொருளாதார வேறுபாடுகள் இவர்கள் மத்தியிலும் இருக்கும்.ஒவ்வொரு நாட்டிலும் இளைஞர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதற்கான காரணங்கள் பலவகைப்பட்டவை.

உதாரணமாக, கென்யாவில் கடன் சுமையை மக்கள் மீது சுமத்திச் சிக்கன நடவடிக்கைகளுக்குள் சிக்கவைக்கும் நிதி மசோதா காரணமானது. நேபாளத்தில் ஊழலும் சமூக ஊடகத் தடையும் காரணங்க

ளாயின. மொராக்கோவில் கல்விக்கும் மருத்துவத்துக்கும் நிதி மறுக்கப்பட்டு, 2030 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் தயாரிப்புக்கு நிதி ஒதுக்கப்பட்டது பிரச்சனையானது. மடகாஸ்கரில் குடிநீர், மின்சாரப் பற்றாக்குறை காரணமானது. பெருவில் குற்றங்களின் அதிகரிப்பு,ஓய்வூதியப் பிரச்சனை போன்றவை காரணங்களாக அமைந்தன. வேறுவேறு காரணங்களாகத் தெரிந்தாலும்,இவற்றின் பொதுவான அம்சம், இளைஞர்களின் எதிர்காலத்துக்குப் பூட்டுப் போடப்பட்டுவிட்டது என்பதுதான்.

ஒன்றிணைந்த போராட்டங்களே விடிவு

உலகத் தொழிலாளர் முதல் உள்ளூர்த்தொழிலாளர் வரை ஒன்றுபட வேண்டும் எனவர்க்க ஒற்றுமையை முன்னிறுத்துவது கம்யூனிஸ்டுகளே. மதவெறியும் சாதியமும் இந்தஒற்றுமையின் எதிரிகளாக உள்ளன. இந்தியச் சூழலில் மனுவாதக் கோட்பாடு ஆளும் கட்சியால் உயர்த்திப்பிடிக்கப்படுகிறது. சாதி,பாலினப் பாகுபாடுகளை இது பெருமைப்படுத்துகிறது. எனவே, சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களையும் சுரண்டலுக்கு எதிரானபோராட்டங்களையும் ஒன்றிணைத்து நடத்த வேண்டிய கடமை நமக்கு உண்டு. தோழர் பி.எஸ்.டி. தம் வாழ்நாளைஇதற்காகவே அர்ப்பணித்தார்.

தோழர் பி.எஸ்.டி. நூற்றாண்டை ஒட்டிச் செவ்வணக்கம் செலுத்துவோம். அவரது போராட்ட வாழ்க்கையிலிருந்துஉத்வேகம் பெற்று, சுரண்டலற்ற சமூகம் படைக்கும் பணியில் முன்னேறுவோம்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.