தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு

18 Feb 2026, 3:04 pm
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு
<p><strong>தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு</strong></p> <p>விழுப்புரம், பிப்.18- சம்பள உயர்வு வழங்காத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சியில் குப்பைகளை அகற்றத் தனியார் நிறுவனத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள 80-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ. மற்றும் வைப்பு நிதிகளை நிலுவையின்றிச் செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை முதல் நகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் ஒப்பந்தம் எடுத்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்த உடன்பாடும் ஏற்படாததால் மூன்றாவது நாளாகப் போராட்டம் தொடர்கிறது. இதனை அறிந்த கட்சியின் சார்பில் முகமது அனாஸ், சே.அறிவழகன், விசிக கட்சியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, வழக்கறிஞர் ராமதாஸ், எழில் உள்ளிட்ட ஏராளமானோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். கோரிக்கைகளைத் தனியார் நிறுவனம் நிறைவேற்ற முன்வரவில்லை எனில், கட்சியின் சார்பில் வியாழக்கிழமை மாலை போராட்டம் நடத்தப்படும் என மாவட்டச் செயற்குழு உறுப்பினர் &nbsp;சே.அறிவழகன் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.