தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

23 Feb 2026, 5:35 pm
சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
<p><strong>சாக்கடை கழிவுநீரை வெளியேற்ற நிரந்தர தீர்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை</strong></p> <p>அவிநாசி, பிப்.23- திருமுருகன்பூண்டி நகராட்சி ராக்கியாபா ளையம் பகுதியில் இருந்து வரும் கழிவுநீர் &nbsp;தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் &nbsp;கடும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். &nbsp;எனவே உடனடியாக நிரந்தரமாக கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க &nbsp;வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர். &nbsp;திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட் பட்ட 16 ஆவது வார்டு ராக்கியாபாளையம் மற் றும் சுற்றியுள்ள மூன்று வார்டு பகுதிகளில் 500 &nbsp;க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நீரோடை கால்வாய் வழியாக வெளி யேற்றப்பட்டது. தற்போது திருமுருகன் பூண்டி நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த இடத் தில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி கட்டப்பட் டது. கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டியின் முன்பு றம் கழிவுநீர் தேங்கி நின்றது. இதனால், கடும் &nbsp;துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற் பட்டது. &nbsp;இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் நகராட்சி நிர்வா கத்திற்கு புகார் அளித்தனர். இதைத்தொ டர்ந்து, கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி இடிக் கப்பட்டது. இருப்பினும் கழிவுநீர் நிரந்தர மாக செல்ல வழி ஏற்படுத்த வேண்டும். கழிவு &nbsp;நீர் மீண்டும் தேங்கினால், மழை காலங்களில் சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும். &nbsp;எனவே இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண &nbsp;வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருமுருகன்பூண்டி நகராட்சி கிளைகள் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.