தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணாப் போராட்டம்

10 Jan 2026, 2:48 pm
அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணாப் போராட்டம்
<p><strong>அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தர்ணாப் போராட்டம்</strong></p> <p>மதுரை, ஜன.10- மதுரை மாநகராட்சி வடக்கு &ndash; 2ஆம் பகுதிக்குழுவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறை வேற்றக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி 24, 25ஆவது வார்டுகளுக்கு உட்பட்ட கட்சி கிளைகள் இணைந்து, மாநகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இந்த தர்ணா போராட்டத்தில், மாநக ராட்சியே குப்பை வரியை குறைக்க வேண்டும், குடிநீருக்கு மீட்டர் பொருத்தி கட்டணத்தை திணிக்கக் கூடாது, செல்லூர், கோசாகுளம், கொடிக்குளம் கண்மாய்களை சீரமைக்க வேண்டும், மீனாம்பாள்புரம் &ndash; பட்டுக்கோட்டை வீதி சாலையை உடனடியாக அமைக்க வேண்டும், 10, 12, 14, 15, 16, 24, 25, 26, &nbsp;27, 32 ஆகிய வார்டுகளில் குண்டும் குழியு மான சாலைகளை சீரமைக்க வேண்டும், அந்தனேரி பகுதியில் வசிக்கும் காட்டு நாயக்கர், கணிக்கர் சமூக மக்களுக்கு மயான வசதியை உறுதி செய்ய வேண்டும், &nbsp;மீனாம்பாள்புரம் சத்யா நகர் பகுதியில் சாலை அமைக்க வேண்டும், சங்கர்லைன் பகுதியில் 84 பேருக்கு உரிய அனுமந்த பட்டாவை தோராய பட்டாவாக வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த தர்ணா போராட்டம் கட்சி கிளைச் &nbsp;செயலாளர்கள் பி.கல்யாணி, கே.ஜோதி பாசு ஆகியோர் தலைமையில் நடை பெற்றது. எஸ்.சங்கர், கே.சிக்கந்தர், கே. மீனாட்சிசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜய ராஜன் போராட்டத்தைத் தொடங்கி வைத்து &nbsp;பேசினார். தொடர்ந்து பகுதிச் செயலாளர் &nbsp;ஏ.பாலு, மாமன்ற உறுப்பினர் டி.குமர வேல், மாவட்டக்குழு உறுப்பினர் கே.ஜாகிர் &nbsp;உசேன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.கணேசன், மு.பிரசாந்த் ஆகியோர் பேசினர். இறுதியாக மாவட்டச் செயலாளர் மா. கணேசன் தர்ணா போராட்டத்தை நிறைவு செய்து பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.