மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.ஆர்.கே புரத்தில் நோன்பு திறப்பு விருந்து
13 Mar 2026, 4:52 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் என்.ஆர்.கே புரத்தில் நோன்பு திறப்பு விருந்து</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 13 – புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என். ஆர்.கே. புரம் கிளை சார்பில் அப்பகுதி இஸ்லாமியர்க ளுக்கு நோன்பு திறப்பு உணவு வழங்கப்பட்டது. மதநல்லிணக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்து வத்தை வலியுறுத்தி, கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் என்.ஆர்.கே.புரத்தில் இந்நிகழ்வு நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் என்.ஆர்.கே. புரம் கட்சிக் கிளை அலுவல கத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், அப்பகு தியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் 140 பேர் கலந்துகொண்டு நோன்பைத் திறந்து உணவ ருந்தினர். மதங்கள் மனிதனைப் பிரிப்பதற் காக அல்ல, ஒற்றுமைப் படுத்துவதற்காகவே உருவானவை. இத்தகைய நிகழ்வுகள் சமூ கத்தில் புரிதலையும், அமைதியையும் வளர்க்க உதவுகிறது என அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற் சிக்கு பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக இந்த நிகழ்வில், கட்சியின் கிளைச் செயலாளர் விழிப்பு நடராஜன், வடக்கு மாநகரக் குழு உறுப்பினர் மனோகர், முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வி.ஈஸ்வ ரமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
