தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சட்டமன்றத்தில் பெண் குழந்தைகளை இழிவுபடுத்திய ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

19 Feb 2026, 3:09 pm
சட்டமன்றத்தில் பெண் குழந்தைகளை இழிவுபடுத்திய ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்
<p><strong>சட்டமன்றத்தில் பெண் குழந்தைகளை இழிவுபடுத்திய ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்</strong></p> <p>ஜெய்ப்பூர் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடரில், திங்களன்று நடை பெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் வீர் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பகதூர் சிங் கோலி,&rdquo;ராஜஸ்தான் பாஜக அரசின் பட்ஜெட் &ldquo;ஆண் குழந்தை&rdquo; பிறப்பு போன்றது. அசோக் கெலாட் (காங்கிரஸ்) முதலமைச்சராக இருந்த போது தாக்கல் செய்த கடைசி பட்ஜெட்டில் அறி விப்புகள் பல இருந்தன. ஆனால் பிறந்தது பெண் குழந்தை, ஆண் குழந்தை அல்ல. அத னால்தான் நீங்கள் இன்று எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறீர்கள். எங்கள் முதலமைச்சர் பஜன் லால் சர்மா (பாஜக) 3 பட்ஜெட்டில், 3 &nbsp;ஆண் குழ்நதையை பெற்றெடுத்துள்ளார். இள மைப் பருவத்தில் மகனைப் பெற்றெடுப்பவர் எப்போதும் &nbsp;பயனுள்ளவராக இருப்பார்&rdquo; என பெண் பாலினத்தை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்த கருத்துக்கு பாஜக மற்றும் அதன் கூட்ட ணிக் கட்சிகள் ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் மேசையை தட்டி பாராட்டின. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்ட மன்றத்திலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மனுஸ்மிருதி இந்நிலையில், பெண் பாலினத்தை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வகை யில் பேசிய பாஜக எம்எல்ஏவின் அடாவடி செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சிபிஎம் கட்சி தனது மத்தியக்குழு முகநூல் பக்கத்தில்,&rdquo;ராஜஸ்தான் சட்டமன்றத்தில் பெண் குழந்தைகளை இழிவுபடுத்தும் வகை யில் பாஜக எம்எல்ஏ பகதூர் சிங் கோலி பேசிய கருத்துகளும், அதற்கு சக சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாகம் அளித்ததும், &lsquo;பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைக ளுக்குக் கற்பிப்போம் (Beti Bachao Beti Padhao)&rsquo; என்ற முகமூடிக்கு பின்னால் இருக்கும் பாஜகவின் உண்மையான முகத்தை அம்பலப் படுத்துகிறது. ராஜஸ்தானில் பெண் சிசுக்கொலை மற்றும் குறைந்த பாலின விகிதத்திற்குப் பின்னால் இருப்பது, இத்த கைய பாலியல் ரீதியான &lsquo;மனுஸ்மிருதி&rsquo; சித் தாந்தமே ஆகும். அவர் மீது பாஜக நடவ டிக்கை எடுக்குமா?&rdquo; என அதில் கேள்வி எழுப் பப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.