தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சென்னை விரைவு செய்திகள்

31 Jan 2026, 5:27 pm
சென்னை விரைவு செய்திகள்

என்.எல்.சி நிறுவன முறைகேடுகள்  நீதிமன்றம் விரைந்து விசாரிக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கடலூர், ஜன.31-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழுக் கூட்டம், கடலூர் சூரப்ப நாயக்கன் சாவடியில் உள்ள சிபிஎம் அலுவலகத்தில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.அமர்நாத் தலைமையில் நடைபெற்றது.  இதில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செய லாளர் மாதவன் வெளியிட்ட அறிக்கையில்: “என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பொறி யாளர்கள் மற்றும் அதிகாரிகளைப் பணிக்கு எடுத்ததிலும், பதவி உயர்வு வழங்கிய திலும் முறைகேடுகள் நடந்துள்ளன. விதிமுறைகளை மீறி 70 ஆயிரம் டன் செம்மண்ணைத் திருட்டுத்தனமாக வெட்டி விற்பனை செய்தது, சாம்பல் கழிவில் கிராபைட் திட்டம் எனக் கூறி வங்கியை ஏமாற்றியது, ஒடிசா மாநிலம் தலபிராவில் டெண்டர் விட்டதில் முறைகேடு எனப் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் மூலம் சுமார் ரூ.442 கோடி ஊழல் நடைபெற்றிருப்பதாகத் தகவல் வெளி யாகியுள்ளது. இது குறித்து மத்தியப் புலனாய்வுத்துறை நடவடிக்கை எடுக்காத தால், மணிகண்டன் என்பவர் உயர் நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கடலூர் நாடாளுமன்ற உறுப்பினரும் இது குறித்து நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி யுள்ளார். எனவே, இந்த ஊழல் வழக்கை உயர் நீதிமன்றம் அவசர வழக்காக விசாரித்துத் தீர்ப்பு வழங்க வேண்டும்; மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தப்பட்டது.

மீனவர் கல்லால்  அடித்து கொலை நான்கு பேரிடம் தீவிர விசாரணை

கடலூர், ஜன.31-  கடலூர் சோனஞ்சாவடி மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மகன் பூமிநாதன் (வயது 50). இவர் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி ராஜசுலோச்சனா கட்டிட வேலைக்குச் சென்று வருகிறார். இந்நிலையில், கடலூர் - சிதம்பரம் சாலையில் சிப்காட் அருகாமையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகே பூமிநாதன் தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார். சனிக்கிழமை காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் இது குறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு கடலூர் மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில், கடலூர் டி.எஸ்.பி தமிழ் இனியன் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். போலீசார் உடலைக் கைப்பற்றி கடலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்தனர். மோப்ப நாய் ‘கூப்பர்’ வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த நாய் கொலை நடந்த உணவகத்தைச் சுற்றியே வந்ததால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதன்பேரில் ஹோட்டல் உரிமையாளர், பூமிநாதனின் மனைவி ராஜசுலோச்சனா மற்றும் பூமிநாதனின் தம்பி, தம்பியின் மனைவி ஆகியோரை கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்ற பெண்ணிடம் இருந்து

பச்சிளம் குழந்தை மீட்பு கிருஷ்ணகிரி, ஜன.31-  வேப்பனஹள்ளி பகுதியை சேர்ந்த நாகம்மாள் என்ற வயது முதிர்ந்த பெண் பச்சிளம் குழந்தையுடன் ஆற்றில் இறங்க முயற்சித்துள்ளார்.  அப்போது அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணை விசாரித்துள்ளனர்.அவர் முன்னுக்கு பின் முரணாக பேசிய நிலையில் குழந்தையை மீட்டு பெண்,குழந்தை இருவரையும் காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் குழந்தையை பாதுகாப்புக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஒப்படைத்துள்ளனர்.

புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களுக்கு  9 மாத தீவன மானியத்தை உடனே வழங்க  விவசாயிகள் சங்கம் கோரிக்கை

புதுச்சேரி, ஜன.31-  புதுச்சேரி பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த 9 மாதங்களாக வழங்கப்படாத தீவன மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயிகள் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் ராமமூர்த்தி மற்றும் செயலாளர் சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில்: “புதுச்சேரி மாநிலத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரமாகப் பால் உற்பத்தித் தொழில் இருந்து வருகிறது. அரசு அறிவித்த தீவனத்திற்கான 75 விழுக்காடு மானியத் தொகை 9 மாதமாக வழங்கப்படாமல் உள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பாண்லே நிறுவனத்தில் தீவனம் தயாரிக்கும் கட்டமைப்பு இருந்தும் அதற்கான முயற்சி எடுக்காதது வருத்தமளிக்கிறது. பாண்லே ஊழியர்களைப் பயன்படுத்தித் தீவனம் தயாரித்து பால் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவசமாக வழங்கினால் உற்பத்தி பெருகும். மேலும், கிராமப்புற சொசைட்டிகளின் ஒருங்கிணைப்பில் தொடங்கப்பட்ட பாண்லே நிர்வாகம் தற்போது நலிவடைந்து வருகிறது. எனவே, பால் உற்பத்தியாளர்களைக் கொண்ட நிர்வாக அமைப்பை உருவாக்க முறையாகத் தேர்தல் நடத்திட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.