தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேது நாராயணபுரம், கான்சாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

13 Nov 2025, 3:30 pm
சேது நாராயணபுரம், கான்சாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
<p><strong>சேது நாராயணபுரம், கான்சாபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருவில்லிபுத்தூர், நவ.13- வத்திராயிருப்பு வட்டம் சேது நாராயணபுரம் ஊராட்சி பகுதியில் அடிப்படை வசதி களை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேது நாராயணபுரம் பேருந்து நிலையம் முன்பு &nbsp;நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், அனைத்து வீதி களிலும் மின்விளக்குகள் பொருத்துதல், இடிந்துள்ள வாறுகால்களை சரிசெய்தல், புதிய வாறுகால்கள் அமைத் &nbsp;தல், சாலைகளை சரிசெய்தல், &nbsp;2வது மற்றும் 4வது வார்டு களில் புதிய பெண்கள் கழிப்ப றைகள் அமைத்தல், ஆயக் &nbsp;குளம் அருகே கண் நோய்க்கு &nbsp;காரணமாக உள்ள கால் வாயை தூர்வாருதல், இரவு 8 மணிக்கு மேல் சேது நாரா யணபுரம் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக் கப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் &nbsp;செயலாளர்கள் தங்கப் பாண்டி, சிங்கராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். கோரிக்கைகளை விளக்கி வட்டாரச் செயலாளர் பெனரி, தாலுகா குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், காளிதாஸ், ஜீவானந்தம், பழனிச்சாமி உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுந்தரபாண்டியன் பேசினார். &nbsp;இதேபோல், கான்சாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிளைச் செயலாளர் முனி யாண்டி தலைமை வகித்தார். கான்சாபுரம் முதல் ராம சாமியாபுரம் வரை சாலையை அகலப்படுத்துதல், பிள்ளை யார் கோவில் அருகிலுள்ள பாலத்தை உயர்த்தி புதிய பாலம் அமைத்தல், 100 நாள் வேலை திட்டத்தில் மலைவாழ் மக்களுக்கும் பணி வழங்கு தல், ஊராட்சியில் கூடுதலாக துப்புரவு பணியாளர்கள் நிய மனம் செய்தல் ஆகியவை அடங்கும். கோரிக்கைகளை விளக்கி வட்டாரச் செயலாளர் பெனரி, மாவட்ட குழு உறுப்பினர் நாகராஜ், வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், காளிதாஸ் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு &nbsp;செய்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சுந்தரபாண்டி யன் பேசினார். இரு இடங்களிலும் கட்சி &nbsp;உறுப்பினர்கள், ஆதரவா ளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.