பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
23 Jan 2026, 5:49 pm

பழுதடைந்த மின்கம்பங்களை மாற்ற வேண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

சென்னை, ஜன. 23 - நெற்குன்றம் பகுதியில் பழுதடைந்த மின் கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி, 145வது வட்டம் கிருஷ்ணா நகர் பிரதான சாலை, கிருஷ்ணா நகர் 1வது குறுக்கு தெரு. 6வது தெரு, நேதாஜி அவென்யூ பிரதான சாலை, கண்ணியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சில மின் கம்பங்கள் உடைந்து மிக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பாதசாரிகளும், வாகன ஓட்டிகளுக்கும் அச்சத்தோடு சென்று வருகின்றனர். இந்த மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளை கடந்து விட்டதால் அவை வலுவிழந்து காணப்படுகின்றன. சாலை களின் உயரமும் அதிகரித்து விட்டதால் மின் கம்பிகள் தாழ்வாக செல்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப மின்மாற்றி அமைக்கப் பட்டது. தற்போது குடியிருப்புகள் அதி கரித்துவிட்டதால் சீரான மின்சாரம் கிடைப்பதில்லை. எனவே, பழைய மின் கம்பங்களை மாற்றி புதிய கம்பங்கள் அமைக்க வேண்டும். தாழ்வாக செல்லும் மின் கம்பி களின் உயரத்தை உயர்த்த வேண்டும் அல்லது புதைவடமாக மாற்ற வேண்டும். தற்போதுள்ள மின்மாற்றியை மாற்றி, அதிக திறன் கொண்டதாக நிறுவ வேண்டும் என வலியறுத்தி கட்சியின் 145வது வட்டக்கிளை சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக கையெழுத்துப் படிவங்களுடன் நெற்குன்றம் உதவிப் பொறியாளரிடம் 145வது வட்ட கிளைச் செயலாளர் ஜி.சங்கர், டி.ராஜன் ஆகியோர் மனு அளித்தனர்.