தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சாட்டையடி சமூக மக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க கோரிக்கை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் சந்திப்பு

27 Mar 2026, 3:15 pm
சாட்டையடி சமூக மக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க கோரிக்கை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் சந்திப்பு
<p><strong>சாட்டையடி சமூக மக்களுக்கு தொகுப்பு வீடுகள் வழங்க கோரிக்கை &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நேரில் சந்திப்பு</strong></p> <p>ராணிப்பேட்டை, மார்ச் 27 &ndash; நெமிலி வட்டம், கரிவேடு மேல் இந்திரா நகர் காலனி பகுதியில் வசிக்கும் சாட்டையடி சமூகத்தைச் சார்ந்த குடும்பங்களுக்கு உடனடியாக இலவச தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த மாதம் 11 குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த போது காவல்துறை தடுத்து நிறுத்த இதனைத் தொடர்ந்து சிபிஎம் தலைவர்கள் தலையிட்டு பொதுமக்கள் கோரிக்கை மனுவை ஆட்சியரிடம் அளிக்க ஏற்பாடு செய்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த குடும்பங்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. &nbsp; தங்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் பெற்றுத்தர வேண்டும் என வெள்ளியன்று (மார்ச் 27) மாவட்ட செயலாளர் பி. ரகுபதியிடம் சாட்டையடி சமூகத்தினர் கோரிக்கை வைத்தனர். எனவே, பட்டா வழங்கப்பட்ட நிலையில், மாவட்ட நிர்வாகம் மேலும் தாமதிக்காமல் விரைந்து செயல்பட வேண்டும். குறிப்பிட்ட அந்த இடங்களை முறைப்படி ஒதுக்கீடு செய்து, 11 குடும்பங்களுக்கும் உடனடியாக தலா ஒரு தொகுப்பு வீட்டை கட்டித் தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் பி. ரகுபதி மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டு கோள் வைத்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.