சீரான குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடிமங்கலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13 Dec 2025, 5:13 pm
<p><strong>சீரான குடிநீர் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குடிமங்கலத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>உடுமலை,டிச.13- குடிமங்கலம் ஒன்றியம் அணிக்க டவு ஊராட்சி ராமசந்திராபுரம் கிரா மத்தில் வசிக்கும் மக்களுக்கு சீரான குடிநீர் வழங்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் சனியன்று ராமசந் திராபுரத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டம் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் குடிமங்கலம் ஒன்றிய கமிட்டி உறுப்பினர் விஜயகுமார் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில், திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடி மங்கலம் ஒன்றியத்தில் இருக்கும் ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் வழங் கப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய் உடைப்பு, குடிநீர் வழங்கல் துறை யின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊராட்சி அதிகாரிகளின் நடவடிக்கையின் கார ணமாக வாரம் ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கும் என்ற நிலை உள் ளது. பொது மக்களுக்கு தினமும் சீரான குடிநீர் வழங்க மாவட்ட நிர்வா கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அணிக்கடவு ஊராட்சியில் இருக்கும் அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதை சரி செய்ய வேண்டும். அரசு பள்ளியின் சுற்றுச்சு வர் இடிந்து விழும் நிலையில் உள்ள தால், அதை சரி செய்ய வேண்டும். ஊராட்சியில் சமூக விரோத நடவ டிக்கையை குறைக்கும் வகையில் அனைத்து பொது இடங்களிலும் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தில் அட்டை வைத் துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும். பெதப்பம்பட்டி யில் காவல்நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் கனகராஜ், ஒன்றி யச் செயலாளர் சசிகலா, ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் ரங்கநாதன், தங்க வடிவேலன், ஓம் பிரகாஷ், மோகனசுந்தரம், கலைவாணி, தங்க வேல், ராஜசேகர் மற்றும் கிளைச் செயலாளர் ராஜேஸ்குமார், திரும லைசாமி உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
