தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை உடனே வழங்குக புதுவை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
10 Nov 2025, 5:08 pm
<p><strong>தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்களின் நிலுவை ஊதியத்தை உடனே வழங்குக புதுவை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை</strong></p>
<p>புதுச்சேரி, நவ. 10- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத் தொழிலாளர்க ளுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்க வேண்டிய உதியத்தை உடனே வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 108 கிராம பஞ்சாயத்துகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் (சட்டம்) திட்டத்தில் (MGNREGA) வேலை செய்து வரும் 60,000க்கும் மேற்பட்ட விவசாயத் தொழி லாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாகச் சம்பளம் வழங்கப் படாமல் இருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்படி, வேலை செய்த 15 நாட்களுக்குள் தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்த அடிப்படைச் சட்டத்தை ஒன்றியத்தி லுள்ள பாஜக அரசாங்கம் துளியும் மதிப்பது கிடையாது. அதே போல, புதுச்சேரியில் ஆட்சி செய்து கொண்டிருக்கும் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசும், இந்தத் தொழிலாளர்களின் துயரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது. 2025-2026ஆம் ஆண்டுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு 7 லட்சம் மனித வேலை நாட்களுக்கான நிதியை ஏற்கனவே விடுவித்துள்ளது (சுமார் ரூ. 21 கோடி). மேலும், கூடுதல் 5 லட்சம் மனித வேலை நாட்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, அதற்கான பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், தற்போது சுமார் ரூ. 15 கோடிக்கும் அதிகமான சம்ப ளம் தொழிலாளர்களுக்கு வழங்கப் படாமல் நிலுவையில் உள்ளது. இதற்குக் காரணம் புதுச்சேரி அரசு, ஒன்றிய அரசுக்குச் சமர்ப்பிக்க வேண்டிய பயன்பாட்டுச் சான்றிதழை முறையாகச் சமர்ப்பிக்காதது தான் என்று தகவல் வெளியாகியுள்ளது.புதுச்சேரியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை தற்போது முதலமைச்சர் வசம் உள்ளது. முதல மைச்சரே இத்துறையின் அமைச்சராக இருந்தும், இதில் எவ்வித அக்கறையும் காட்டவில்லை. மேலும், கிராமப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளும் இந்த நிலுவைத் தொகையை விரைந்து விடுவிப்பதற்கான எந்த வொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை களையும் எடுக்காமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. எனவே புதுச்சேரி முதலமைச்சர் உனடியாகத் தலையிட்டு, இனியும் காலம் கடத்தாமல் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை செய்த நாட்களுக்குரிய நிலுவைச் சம்பள மான ரூ. 15 கோடியை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து பஞ்சாயத்துகளிலும் சட்டம் உறுதி செய்துள்ள படி, 100 நாட்கள் முழுமையாக வேலையை உறுதி செய்ய வேண்டும். சட்டக்கூலியான ரூபாய் 336ஐ (தினசரி ஊதியம்) குறைக்காமல் முழுமையாக வழங்க வேண்டும். இந்த மிக முக்கியமான பிரச்சனையை விரைந்து தீர்க்க புதுச்சேரி அரசு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இல்லை யென்றால் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.</p>
