ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
17 Mar 2026, 3:26 pm
<p><strong>ரூ.1 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதி வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், மார்ச் 17- தேர்தல் நடத்தை விதிகளில் ரூ.50 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக கொண்டு செல்ல அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இதனால் திருப்பூர் போன்ற தொழில் நகரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவே ரூ.1 லட்சம் வரை எடுத்த செல்ல அனுமதி வழங்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரண வரே விடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோரிக்கை வைத் துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிர திநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான மனிஷ் நாரணவரே தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் யாதவ் கிரிஸ் அசோக், மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்திகேயன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக ளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், தேர்தல் நடத்தை விதிமு றைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்தார். மேலும், தேர் தல் செலவினங்கள் குறித்த பட்டியல் விவரங்களை பகிர்ந்து கொண்டார். அதில், எந்தெந்த பொருளுக்கு எவ்வ ளவு வாடகை என்கிற விவரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் பேசுகையில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்க மாக எடுத்துச் செல்ல கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்திருப் பது, திருப்பூர் போன்ற தொழில் நக ரங்களில் மிகவும் பாதிப்பை ஏற்ப டுத்தும். எனவே ரூ.50 ஆயிரம் என்பது குறைவான தொகையாக உள்ளது. ஒரு லட்சம் ரூபாய் வரை கொண்டு செல்வதற்கான அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். இதை அனைத்து கட்சிகளும் வழி மொழிந்தனர். இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர். குமார், ச.நந்தகோபால், பா.சௌந்த ரராஜன், ஆர்.பரமசிவம், சிகாமணி ஆகியோர் பங்கேற்றனர்.</p>
