பொங்குபாளையத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
8 Dec 2025, 4:39 pm
<p><strong>பொங்குபாளையத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை</strong></p>
<p>திருப்பூர், டிச.8- பொங்குபாளையம் ஊராட்சியில், குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண் டும். குப்பைகளை வீடு, வீடாக முறை யாக சேகரிக்க வேண்டும். நியாய விலை கடை கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதை புதிதாக கட்ட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் திங்களன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட கட்சி பொங்குபாளையம் கிளை சார்பில் எஸ். அப்புசாமி அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, திருப்பூர் ஊராட்சி ஒன்றி யம் பொங்குபாளையம் ஊராட்சியில் கடும் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதை உடனடியாக தீர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர், பொங்குபாளையம் ஊராட்சி செயலர் ஆகியோருக்கு பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக் கப்படமால் உள்ளது. பரமசிவபாளை யத்தில் சாலைகளில் குப்பை கொட்டப் படாமல் இருக்க வீடுகளுக்கு சென்று குப்பையை வாங்கி, சுகாதார சீர்கேடு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பல வீதி களில் உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளன. மேலும் மலை காலங்க ளில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காளம்பாளையத் தில் செயல்பட்டு வரும் நியாய விலை கடை கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர். காளியப்பன் உட்பட பலர் உடனி ருந்தனர். திருப்பூர் எஸ்.ஆர்.நகர் வடக்கு குடி யிருப்போர் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, திருப்பூர் மாநகராட்சி எஸ்.ஆர்.நகர் முதன்மை குடியிருப்பு பகுதியாகும். தற்போது எஸ்.ஆர்.நகர் வடக்குப்பகுதியில் குமரன் மெயின் வீதியில் உள்ள காலி மனையில் செல்போன் கோபுரம் அமைக்கும் முயற்சி நடந்து வருகிறது. இந்த பகுதியில் 70க்கும் மேற்பட்ட குடும்பத்தி னர் வசித்து வருகின்றனர். செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சால் அனைவ ரும் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.எனவே செல்போன் கோபுரம் அமைக்க அனுமதிக்க கூடாது என குறிப்பிட்டிருந் தனர். தமிழ்நாடு இ.பி, இ.பிஸ்.பி., மின் ஒப் பந்ததாரர்கள், மின் பணியாளர்கள் சங் கங்களின் கூட்டமைப்பினர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, மின்சார பாதுகாப்பிற்கு எதிரான கருத்துக்களை ஈ.பி.சரவணன் தொடர்ந்து பரப்பி வருகிறார். மேலும், மின் ஒப்பந்ததாரர் களை நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் மிரட்டியும் வருகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். உடுமலை கொங்கல்நகரம் பகு தியை சேர்ந்த ஜோதி என்பவர் அளித்த மனுவில், உடுமலை கொங்கல் நகரம்புதூர் அண்ணாநகரில் ஆதிதிரா விடர் நலம் தனி தாசில்தாரால் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்நிலை யில் அந்த கிராமத்தை சேர்ந்த சிலர் வீட்டு மனை பட்டா இடத்தை ஆக்கிர மிப்பு செய்து நாங்கள் பயன்படுத்த இய லாதவாறு கோவில் கட்டியுள்ளனர். எனவே எனது இடத்தை மீட்டு தர வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். திருப்பூரை சேர்ந்த நவீன் என்பவர் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டத் தில் பல்வேறு பகுதிகளில் கிராவல் மண் பட்டா நிலங்களில் இருந்து திருடப்படு கிறது. போலி ஆவணம் மூலம் முறை கேடாக மணல் கடத்தி வருகிறார்கள். தாராபுரம் நாதம்பாளையத்தில் செயல் படாத குவாரிகளின் பெயரில் உரிமம் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டு வருகி றார்கள். எனவே இது தொடர்பாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என் றார். அவிநாசி சீனிவாசபுரம் ஜே.ஜே.கார்டன் பகுதி பொதுமக்கள் அளித்த மனுவில், எங்களது பகுதியில் பல ஆண்டுகளாக முறையாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரி செலுத்தி வசித்து வருகிறோம். நாங்கள் அனைவ ரும் கூலி வேலைதான் செய்து வரு கிறோம். எனவே நாங்கள் வசித்து வரும் வீட்டிற்கு நத்தம் பட்டா வழங்க வேண் டும். என வலியுறுத்தி இருந்தனர். பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி பழங் கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.3.13 கோடி முறை கேட்டில் ஈடுபட்ட முன்னாள் தலைவர் தனபால் மற்றும் முன்னாள் செயலாளர் வடிவேலு உள்ளிட்ட நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும், தன பால் தலைவராக இருந்த காலகட் டத்தில் கிரயம் பெற்ற சொத்துக்கள், வருவாய் உள்ளிட்டவைகளை ஆய் வுக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.</p>
