தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறுதல்

19 Nov 2025, 3:33 pm
பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறுதல்
<p><strong>பெற்றோரை இழந்த 4 குழந்தைகளுக்கு&nbsp; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆறுதல்</strong></p> <p>கள்ளக்குறிச்சி, நவ.19- கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே பூட்டைக் கிராமத்தில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகள் வாழ்க்கையைத் தொடர அரசின் உதவியை எதிர்நோக்கி இருந்தனர். குழந்தைகளின் தாயார் வசந்தா ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், கூலித் தொழிலாளியான தந்தை கமலக்கண்ணன் கல்லீரல் பாதிக்கப்பட்டு சமீபத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த நிலையில் ஊர் பொது மக்கள் முயற்சியால் அடக்கம் செய்யப்பட்டது. மூத்த மகள் லாவண்யா முதலாம் ஆண்டு பொறியியல் படிப்பை நிறுத்தி விட்டார். ரீனா, ரீஷிகா உயர்நிலைப் படிப்பை நிறுத்தியதோடு, கடைசி மகன் அபினேஷ் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இச்சம்பவம் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குச் சென்று அரசு சார்பில் நிதி உதவி வழங்கப்பட்டது. தாய் தந்தையை இழந்த 4 குழந்தை களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் கூறி னார். மூத்த மகள் லாவண்யாவிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதோடு, அவருக்கு அரசு நிரந்தர வேலை வழங்கிட உறுதிப்படுத்துவது சார்பாக பேசினார். இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு ஜி.ஆனந்தன், பி.சுப்பிர மணியன், மாவட்டக்குழு சசிகுமார், ஒன்றிய செயலாளர் சிவாஜி, பாஸ்கர், லோகநாதன், சரத்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.