தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அணு ஆயுத ஆபத்தை தீவிரப்படுத்தும் ஒப்பந்தத்திற்கு எதிராக போராட வாருங்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன் , அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு

1 Sept 2026, 8:25 pm
அணு ஆயுத ஆபத்தை தீவிரப்படுத்தும் ஒப்பந்தத்திற்கு எதிராக போராட வாருங்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன் , அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு

அணு ஆயுத ஆபத்தை தீவிரப்படுத்தும் ஒப்பந்தத்திற்கு எதிராக போராட வாருங்கள் ஆஸ்திரேலியா, பிரிட்டன் , அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்காவிற்கு இடையே ஆக்கஸ் (AUKUS) ராணுவ ஒப்பந்தம் உள்ளது. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் நவீன ஆயுதங்களை ஆஸ்திரேலியாவில் அமைப்பதுதான் இந்த நாடுகளின் நோக்கம். இந்த ஒப்பந்தமானது ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஸ்திரேலியாவின் சுயநலனுக்காக உருவாக்கப்பட்ட அமெரிக்க தலைமையிலான ஒரு ராணுவஒப்பந்தம் ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் போர் அபாயத்தையும் அணு ஆயுத உற்பத்தி அதிகரிப்பையும் தீவிரப்படுத்துகிறது.

அணு ஆயுதங்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இதுதான் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நடவடிக்கையாக மாறியுள்ளது. எனவே இந்தஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரத்தையும் போராட்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள சர்வதேச அமைதி மற்றும் போர்எதிர்ப்பு இயக்கங்கள் தீவிரப்படுத்த வேண்டும்.நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் ராணுவமயமாக்கலுக்கு எதிராக உலகளவில் போராட்டம் நடத்தவேண்டும் என ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

கியூபாவின் ஹவானா நகரில் ஆகஸ்ட் மாதம்முதல் வாரத்தில் சர்வதேச கம்யூனிஸ்ட் மற்றும்தொழிலாளர்கள் கட்சிகளின் கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில், ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தனியாகச் சந்தித்துப் பேசினர். 2021-இல் ஆக்கஸ் கூட்டணி அறிவிக்கப்பட்ட போதிலிருந்தே இக்கட்சிகள் அதற்குகடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான்அவ்வமைப்புக்கு எதிராக உலகளவில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளன.

இந்த ஆக்கஸ் ஒப்பந்தத்தின் படி 2055-ஆம் ஆண்டிற்குள் 25.44 லட்சம் கோடி ரூபாய் முதல் 34.93 லட்சம் கோடி ரூபாய் வரை ($268பில்லியன் - $368 பில்லியன் வரை) அணு மற்றும் நவீன ஆயுதங்களுக்கு செலவு செய்ய ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மனித குலத்தின் அழிவுக்கு மட்டுமே வழிவகுக்கும் ஆயுதங்களுக்கு பணத்தை செலவுசெய்வதற்கு பதிலாக மக்களின் சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் பிற பொதுச் சேவைகளை மேம்படுத்தப்பயன்படுத்தலாம். தரமான வேலைவாய்ப்புகளையும் கணிசமாக உருவாக்க முடியும் என்றும் இந்த மூன்று நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும்வலியுறுத்தியுள்ளன.

காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள அவசரமாக சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் இந்த நேரத்தில், ராணுவ உற்பத்தியின் விரிவாக்கம் உலகை மேலும் ஆபத்தானதாக மாற்றுகிறது. இந்தஒப்பந்தம் இந்த மூன்று நாடுகள் மக்களின் நலன்களுக்கு சேவை செய்யவில்லை. மாறாக,அக்கூட்டணி நாடுகளுக்குள் உள்ள ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்கே சேவை செய்கிறது. இது ராணுவத் தொழில்துறையின் லாபத்தை அதிகப்படுத்த மட்டுமே உதவி செய்யும்என தங்களின் அறிக்கையில் மூன்று நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன. மக்களுக்கு இடையேயான அமைதி, சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது காலநிலை நெருக்கடியை எதிர்கொள்ள முதலீடு செய்வது தான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாற்று வளர்ச்சிப் பாதை என்றும் அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.