ரால் காஸ்ட்ரோவை அவமதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம
28 May 2026, 6:56 pm

ரால் காஸ்ட்ரோவை அவமதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம

ஹவானா, மே 28 — கியூபாவிற்கும் அந்நாட்டின் புரட்சி கரத் தலைவர் ரால் காஸ்ட்ரோவிற்கும் எதிராக அமெரிக்கா எடுத்து வரும் சமீ பத்திய ந டவடிக்கை களுக்கு ம் , அந்நாட்டுக்கு விடுக்கும் அச்சுறுத்தல்க ளுக்கும் உலகெங் கி லு ம் உ ள ்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சி கள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

சோசலிச கியூபாவை சீர்குலைக்க வும், அங்கு ராணுவத் தாக்குதல் நடத்து வதற்கான சூழலை உருவாக்கவும் ஏகாதிபத்தியவாதிகள் எடுத்துள்ள புதிய முயற்சியின் ஒரு பகுதியே இந்த நடவ டிக்கைகள் என அக்கட்சிகள் குறிப் பிட்டுள்ளன.

1996-ஆம் ஆண்டு மியாமியை தளமாகக் கொண்டு செயல்பட்ட, கியூ பாவுக்கு எதிரான “பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ” (Brothers to the Rescue) என்ற அமைப்பின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப் பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பான பல ஆண்டுகள் பழமையான வழக்கை அமெரிக்க நீதித்துறை மீண்டு ம் கையில் எடுத்துள்ளது.

அதில் ரால் காஸ்ட்ரோவை சிக்கவைக்கவும் முயற்சி கள்நடக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைகைது செய்வதா கக் காட்டி கியூபா மீது போர் தொடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், இந்தக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சர்வதேச சட்டங்களின்படி சட்டவிரோத மானது என்றும் சாடியுள்ளன.

கியூபா மீதான அமெரிக்காவின் பொரு ளாதாரத் தடைகள் தொடரும் நிலை யில், அந்நாட்டின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே இந்த நடவடிக் கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவை தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு புதுதில்லியில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய குழுக் கூட்டத்தில் “கியூபா தனித்து விடப்படவில்லை; கியூபாவை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) அமெரிக்காவின் இந்தநடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது.

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கியூபாவிற்கு எதிராக அடுத்த டுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் பின்பற்றி வரும் நீண்டகால விரோதப் போக்கின் ஒரு பகுதி என்றும் அது கூறியுள்ளது.

வெளிநாட்டுத் தலையீடு கள் இன்றி தனது சொந்த அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும் கியூபாவின் உரிமையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனம் போலியான விசாரணை ரால் காஸ்ட்ரோவுக்கு எதிரான இந்த நடவடிக்கை “ஒரு போலியான அரசி யல் விசாரணை” என்று கண்டிக்கப்பட் டுள்ளது.

கியூபா மீது குண்டுவீசவும் போர் தொடுக்கவும் சட்டப்பூர்வக் கார ணத்தை உருவாக்க அமெரிக்கா முயல்கி றது என்று எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது.

கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி ரால் காஸ்ட்ரோவுக்கு எதிரான அமெ ரிக்காவின் கைது உத்தரவை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி (KKE) கடுமையாக கண்டித்துள்ளது.

‘யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’ (USS Nimitz) விமானந்தாங்கிப் போர்க்கப்பலை அந்நாட்டுக்கு அருகே நிறுத்துவது உள்ளிட்ட கியூபாவுக்கு எதிரான ராணுவ மிரட்டலின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த விவ காரத்தில் ஐரோப்பிய அரசாங்கங்கள் ம ௌனம் காப்பதையும் கடுமையாக விமர்சித்துள்ளது

. இத்தாலி (PCI), ஸ்பெயின் (PCE) மற்றும் போர்ச்சுகல் (PCP) கம்யூனிஸ்ட் கட்சிகள் ரால் காஸ்ட்ரோ மீதான அமெ ரிக்காவின் குற்றச்சாட்டைக் கண்டித் துள்ளதோடு, இது கியூபாவுக்கு எதிரான ராணுவத் தாக்குதலுக்கும் ஆக்கிரமிப் பிற்கும் வழிவகுக்கும் ஆபத்தான நட வடிக்கை என்று கூறியுள்ளன.

கியூபா மீதான குற்றச்சாட்டு அமெ ரிக்காவின் அரசியல் நாடகம் என்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPB) விமர்சித்துள்ளது.

பன்றி வளைகுடா படையெடுப்பு (Bay of Pigs invasion), கியூப தலைவர்களைக்கொலை செய்ய முயன்றது, பயங்கரவாத குண்டு வெடிப்புகள் என அமெரிக்கா பல ஆண்டு களாக கியூபாவிற்கு எதிராகச் செய்து வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் லத்தீன் அமெரிக்கா ரால் காஸ்ட்ரோ மீதான குற்றச் சாட்டு, வரும் நாட்களில் கியூபா மீது போர் தொடுப்பதற்கான காரணத்தை உரு வாக்கி அதை நியாயப்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்புச் செய லாகும் என்று தென் ஆப்பிரிக்க கம்யூ னிஸ்ட் கட்சி (SACP) தெரிவித்துள்ளது.

மாறி வரும் பன்முனை உலகில் அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் விரக்தியையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளது.

துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி ரால் காஸ்ட்ரோ மீதான குற்றச் சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி கூ றி யு ள ்ள து .

1 9 9 6 - இ ல் சு ட் டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் கியூபாவின் வான்வெளியில் தொடர்ந்து அத்துமீறிய தாகவும், அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது கியூபாவின் இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைக்கு உட்பட்டதே என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி 1996-இல் வான்வெளியைப் பாது காக்க கியூபா எடுத்த முடிவு சர்வதேசச் சட்டத்தின் கீழ் முறையான தற்காப்பு நடவடிக்கையே என்று ஆஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி (CPA) கூறியுள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்சிகோ, பிரேசில், அர்ஜெண்டினா, சிலி ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ரால் காஸ்ட்ரோ மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை “வேடிக்கையான மற்றும் வெட்கக் ்கேடான” முயற்சி என்று கண்டித் துள்ளன.

“கியூபா தனித்து விடப்படவில்லை” பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது அறிக்கைகளில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடை கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதி ராகப் பல ஆண்டுகளாக கியூபா காட்டி வரும் எதிர்ப்பைப் பாராட்டியுள்ளன.

கியூபப் புரட்சியை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மற்றும் சமூக முன்னேற் றத்தின் அடையாளமாகப் புகழ்ந்துள் ளன. கியூபாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஆதரவு பிரச்சாரங்களை வலுப்படுத்தவும், அமெ ரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தவும் அக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

“கியூபா தனித்து விடப்படவில்லை” என்பதை பிரகடனப்படுத்தி, தீவிரம டைந்து வரும் அமெரிக்காவின் தடை கள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிராக கியூப மக்கள், கியூபப் புரட்சி மற்றும் ரால் காஸ்ட்ரோ ஆகியோருக்கு உலகெங்கி லும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்க ளது ஆதரவை மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளன.