‘கம்யூனிஸ்ட் - இஸ்லாமிய சதி’ என்ற புனைசுருட்டு! - எம்.ஏ.பேபி
yesterday

‘கம்யூனிஸ்ட் - இஸ்லாமிய சதி’ என்ற புனைசுருட்டு!

வலதுசாரிகளுக்கு கம்யூனிஸ்டுகள் எப்போதும் கண்ணில் உருத்தும் துரும்பாகவே இருந்து வருகின்றனர். எனவே, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏடான ‘ஆர்கனைசர்’, தனது அக்டோபர் 11,2026 இதழில், வழக்கமான தந்திரத்தைக் கையாண்டு வரலாற்று திரிபுவாதத்திலும், கம்யூனிஸ்டுகள் மீதான தாக்குதலிலும் ஈடுபட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. அசோக் சிங்காலின் நூற்றாண்டுவிழாவை போற்றிப் புகழும் அந்த இதழின் தலையங்கம், “ராமர் கோவில் மறுநிர்மாணத்திற்கு அறிவுத் தளத்தில் உருவானகம்யூனிஸ்ட்-இஸ்லாமிய சூழ்ச்சிகளே மிகப்பெரிய தடையாக இருந்தது” என்று குறிப்பிடுகிறது.தான் செய்த கேடுகெட்ட செயல்களை நியாயப்படுத்தும் முயற்சியில், தனது வரலாற்று உரிமைகோரல்களைக் கேள்வி கேட்டவர்களையும், வகுப்பவாத அணிதிரட்டலை எதிர்த்துக் களம் காண்பவர்களையும், இந்தியக் குடியரசின் மதச்சார்பற்ற அடித்தளத்தைப் பாதுகாத்தவர்களையும் இழிவுபடுத்த ஆர்.எஸ்.எஸ் முயல்கிறது. இந்த அவதூறானது, வரலாற்றுச் சான்றுகளுக்குப் பதிலாக அவதூறுகளையும், பகுத்தறிவுக்குப் பதிலாக வகுப்புவாதப் பாகுபாட்டையும் பதிலீடு செய்யும் முயற்சியாகும்.

பாபர் மசூதி இடிப்பும் மதச்சார்பின்மை நிலைப்பாடும்

கம்யூனிஸ்டுகள் எப்போதும் கோவில் கட்டுவதற்கு எதிரானவர்கள் அல்ல. கோவில் கட்டுவதற்காக ஒரு மசூதி இடிக்கப்பட்டதையே நாங்கள் எதிர்த்தோம். அயோத்தியில் பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் கோவில் கட்டுவதற்கான இயக்கம், மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் வகுப்புவாத அரசியலில் இருந்தே பிறந்ததேதவிர, மத உணர்வுகளிலிருந்து அல்ல என்பதை நாங்கள் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம்.

மக்களின் மத உணர்வுகளை மதிப்பதற்கும், ஒருமத அடையாளத்தைப் பெரும்பான்மைவாத ஆதிக்கத்தின் கருவியாக மாற்றும் அரசியல் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கும் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது. நவீன சமூக அறிவியல் மற்றும்அறிவியல் சான்றுகளின் அடிப்படையில் இந்திய வரலாற்று வரைவியலை உருவாக்கிய அறிஞர்கள், பாபர் மசூதி பகுதி தொடர்பான கோரிக்கைகள் குறித்த ஆதாரங்களைஆராய்ந்து, அந்த ஆய்வில்நிரூபிக்கப்படாத கூற்றுக்களைக் கேள்விக்குட்படுத்தினர். இத்தகைய அறிவார்ந்த ஆய்வுகளைச் சதித்திட்டம் எனச் சித்தரிப்பது, வரலாற்று ஆராய்ச்சி என்பதுஆர்.எஸ்.எஸ்ஸின் பார்வையை உறுதிப்படுத்தும் போது மட்டுமே செல்லுபடியாகும் எனக் கூறுவதாகும்.அயோத்தி நில உரிமை வழக்கில் நவம்பர் 2019-ல்உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், சர்ச்சைக்குரிய இடத்தை கோவில் கட்ட ஒதுக்கீடு செய்தபோதிலும், டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டதைச் சட்டத்தின் ஆட்சியை மீறிய செயல் என வகைப்படுத்தியது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.

மத அடிப்படைவாதத்திற்கு எதிரான கம்யூனிஸ்டுகளின் தளர்வற்ற போராட்டம்

கம்யூனிஸ்டுகளை இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் கூட்டாளிகளாகச் சித்தரிக்கும் முயற்சி, ஆர்எஸ்எஸ்சின் உண்மையான அரசியல் வரலாற்றை ஆராயும்போதுதவிடுபொடியாகிறது. கம்யூனிஸ்டுகள் அனைத்து வடிவங்களிலான மத அடிப்படைவாதத்தையும் தொடர்ச்சியாக எதிர்த்துவந்துள்ளனர் என்பது நிறுவப்பட்ட உண்மையாகும். பெரும்பான்மைவாத வகுப்புவாதம் மட்டுமின்றி, இஸ்லாமியஅடிப்படைவாதம் மற்றும் காலிஸ்தானி பிரிவினைவாதம் ஆகியவற்றையும் கம்யூனிஸ்டுகள் உறுதியோடு எதிர்த்துள்ளனர்.பஞ்சாப்பில் காலிஸ்தானி தீவிரவாதிகளின் கரங்களால் 200-க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களும் ஆதரவாளர்களும் வீரமரணம் அடைந்தனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பிரிவினைவாதிகளுக்கு எதிராக உறுதியான நிலைஎடுத்ததற்காக எங்களது தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

சீக்கிய அடையாளத்தையும் காலிஸ்தானி தீவிரவாதத்தையும் ஒன்றாகக் குழப்புவது கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு அல்ல. வன்முறை மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்காகவும் பேசுவதாக உரிமை கோரியவர்களை எதிர்த்த அதே வேளை

யில், சீக்கியர்கள் மற்றும் பஞ்சாப்பியர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதே கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடாக இருந்தது. குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காகத் தீவிரவாதக் கூறுகளைப் பயன்படுத்தும் முயற்சிகள் உட்பட, பஞ்சாப் நெருக்கடியை காங்கிரஸ் அரசு கையாண்டசுயநலப் போக்கையும் கம்யூனிஸ்டுகள் எதிர்த்தனர்.நாங்கள் பல்வேறு காலகட்டங்களில் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின் ஆத்திரத்திற்கும் ஆளாகி

யிருக்கிறோம். ஷா பானோ தீர்ப்பு தொடர்பான சர்ச்சைஇதற்குச் சிறந்த உதாரணமாகும். 1985 ஆம் ஆண்டில்,விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125-ன் கீழ் ஜீவனாம்சம் கோருவதற்கான உரிமையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இத்தீர்ப்பிற்கு எதிராக முஸ்லிம் மத பழமைவாதத் தலைவர்கள் நடத்திய தொடர் பிரச்சாரத்தால் அழுத்தத்திற்குள்ளான ராஜீவ் காந்தி அரசு, 1986 இல் முஸ்லிம் பெண்கள் (விவாகரத்து உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை இயற்றியது. முஸ்லிம் சமூகத்தின் நலன்களை அதன் பழமைவாத மதத் தலைவர்கள் மட்டுமேபிரதிநிதித்துவப்படுத்த முடியும்என்ற வாதத்தை கம்யூனிஸ்டுகள் ஏற்கவில்லை. நாங்கள் அந்த மசோதாவை எதிர்த்தோம்; இஸ்லாமியமத அடிப்படைவாதிகளின் கோபத்தை எதிர்கொண்டோம்.

அதேபோல, சாதி ஒடுக்குமுறை, தீண்டாமை, ஆணாதிக்கம் மற்றும் மத அறியாமை ஆகியவற்றிற்கு எதிரான எதிர்ப்பு என்பது இந்துக்களுக்கு எதிரான பகைமை அல்ல. இருப்பினும், கம்யூனிஸ்டுகளின் இந்த வேறுபட்ட தன்மைகளை அழித்துவிடவே ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. இந்து வகுப்புவாதத்தின் மீதான ஒவ்வொரு விமர்சனத்தையும் ‘முஸ்லிம் ஆதரவு’என முத்திரை குத்துவதன் மூலம், தனது சொந்த அரசியல் திட்டத்தை விமர்சனங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளமுயல்கிறது.

கம்யூனிஸ்டுகளின் தியாகமும் ஆர்.எஸ்.எஸ்ஸின் மன்னிப்பு மனுக்களும்

கம்யூனிஸ்டுகள் மீதான இந்த வெறுப்பின் வேர்களைக் கண்டறிய விடுதலைப் போராட்டக் காலம் வரை பின்னோக்கியும் செல்லலாம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் வகித்த பாத்திரங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது இங்கு அவசியமாகிறது.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட் விடுதலைப் போராட்ட வீரர்களின் பங்கு நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் அரசியல் தலைமைக்குழுவின் ஒன்பது உறுப்பினர்களும் பிரிட்டிஷ்

சிறைகளில் நீண்ட ஆண்டுகள் கழித்த; பின்னர்காங்கிரஸ் ஆட்சியிலும் சிறைவாசத்தை எதிர்கொண்டசுதந்திரப் போராட்ட வீரர்களாவர்.

தோழர் ஏ.கே. கோபாலன் ஆகஸ்ட் 15, 1947 அன்று, பிரிட்டிஷாரால் சிறை வைக்கப்பட்டிருந்த கண்ணனூர் (கண்ணூர்) சிறையில் தேசியக் கொடியை ஏற்றினார். பள்ளியில்படித்துக் கொண்டிருந்த தோழர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், 1932 இல் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் யூனியன் ஜாக் கொடியை இறக்கி மூவர்ணக்கொடியை ஏற்றியதற்காகக் கைது செய்யப்பட்டார். அந்தமானில் உள்ள செல்லுலார் சிறை, கம்யூனிஸ்டுகள் மற்றும் புரட்சியாளர்களின் தியாகங்களுக்குச் சான்றாக உள்ளது.

இதற்கு நேர்மாறாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு விடுதலைப் போராட்டத்திலிருந்து திட்டமிட்டு விலகியிருந்து, வகுப்புவாத அணிதிரட்டலில் மட்டுமே கவனம் செலுத்தியது. தேசிய இயக்கத்துடனான தொடர்பைப் பற்றிய அதன் ஒரே உரிமை கோரல் வி.டி. சாவர்க்கரை மட்டுமே சார்ந்துள்ளது; ஆனால் அவரின் சந்தேகத்திற்குரிய வரலாறு இந்த உரிமைகோரலின் போலித்தனத்தை வெளிப்படுத்துகிறது. வரலாற்று ஆசிரியர் ஆர்.சி. மஜும்தார், செல்லுலார் சிறையிலிருந்துவிடுதலை கோரி நவம்பர் 14, 1913 அன்று சாவர்க்கர் அளித்த கருணை மனுவைஆவணப்படுத்தியுள்ளார். சாவர்க்கர் “அரசியலமைப்பு முன்னேற்றம் மற்றும் ஆங்கில அரசுக்கு விசுவாசமாக இருக்கும் தீவிர ஆதரவாளராக” மாறுவதாகவாக்குறுதி அளித்தார்; மேலும் முன்னதாகப் பயன்படுத்தப்பட்ட ‘வன்முறை’ முறைகளை வெறுப்பதாகவும், (பிரிட்டிஷ்)சட்டம் மற்றும் அரசியலமைப்பு முறைகளை உயர்த்திப் பிடிப்பதாகவும் அறிவித்தார்.

அதன் பிறகு, சாவர்க்கரின் அரசியல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இல்லாமல், பிரதானமாக காங்கிரஸ்

மற்றும் இடதுசாரி தலைமையிலான இயக்கங்களுக்கு எதிராகவே திருப்பப்பட்டது. இந்து மகாசபையின் தலைவராக, 1942 ஆம் ஆண்டின் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்திற்குத் தனது அமைப்பிலிருந்து எந்த ஆதரவும் கிடைக்காமல் பார்த்துக் கொண்டதுடன், ‘இந்துக்கள்’ அதில் பங்கேற்க வேண்டாம் என்றும் அழைப்புவிடுத்தார். அரசுப் பதவிகளில் இருக்கும் இந்து சங்கடனிஸ்டுகள் அதாவது, இந்து அமைப்பினர், தொடர்ந்து தங்கள் வழக்கமான பணிகளைச் செய்யுமாறு அவர் அறிவுறுத்தினார். 1942 ஆகஸ்டில்வெடித்த கலவரங்களில் பங்கெடுக்காமல் ஆர்.எஸ்.எஸ் விலகியிருந்ததாக பம்பாய் உள்துறை செயலகமே பதிவு செய்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் - ஜின்னா கூட்டும் மதச்சார்பற்ற இந்தியாவும்

இந்தியப் பிரிவினைக்குப் பாதை வகுக்க உதவியஇரு தேசக் கோட்பாடு முகமது அலி ஜின்னாவின் பிரத்யேகப் படைப்பு அல்ல. சாவர்க்கர் அதற்கு முன்பேஅதை வெளிப்படுத்தியிருந்தார். 1937 இல் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்து மகாசபைக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இந்தியா இன்று ஒரே மாதிரியான ஒற்றைத் தேசமாகக் கருத முடியாது; மாறாக, பிரதானமாக இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரண்டு தேசங்கள்உள்ளன” என்று அறிவித்தார். 1939 இல், இந்துக்கள் தங்களுக்குத்தானே ஒரு தேசம்என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

1940 மார்ச்சில் ஜின்னா, இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறு தேசங்கள் என்றும், ஒரே அரசில் அவர்கள் இணைவது சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்றும் வாதிட்டபோது,“திரு. ஜின்னாவின் இரு தேசக் கோட்பாட்டில் எனக்கு எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை” என்று சாவர்க்கர் அறிவித்தார்.எம்.எஸ். கோல்வால்கர் தனது “நாம் அல்லது நமதுவரையறுக்கப்பட்ட தேசம்” (We, or Our Nationhood Defined) என்ற நூலில், தேசிய அடையாளம் என்பது அரசியலமைப்புச்சட்டத்தின் குடியுரிமையிலிருந்து அல்லாமல், கலாச்சாரச் சார்ந்திருப்பிலிருந்து பெறப்படும் ஒரு இந்து தேசமாக இந்தியாவை உருவகப்படுத்தினார்.

இந்துக்களும் முஸ்லிம்களும் தனித்தனி தேசங்கள் என்ற உரிமைகோரலை அம்பேத்கர் தீவிரமாகபகுப்பாய்வு செய்து, மத அடையாளத்தின் மூலம் தேசியத்தை வரையறுப்பதன் அரசியல் விளைவுகளை பரிசீலித்தார். அம்பேத்கர் தெளிவாகக் கூறினார்: “விசித்திரமாகத்தோன்றினாலும், திரு.சாவர்க்கரும் திரு. ஜின்னாவும் ஒரு தேசமா அல்லது இரண்டு தேசங்களா என்பதில் ஒருவருக்கொருவர்எதிரெதிராக இருப்பதற்குப் பதிலாக, முழு உடன்பாட்டைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன — ஒன்றுமுஸ்லிம் தேசம், மற்றொன்று இந்துதேசம் என்பதில் இருவருமே உடன்படுவது மட்டுமின்றி, வலியுறுத்தவும் செய்கிறார்கள். இரு தேசங்களும் வாழ வேண்டிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் மட்டுமே அவர்கள் வேறுபடுகிறார்கள்”.

உண்மையில், அக்டோபர் 1947 இல் பம்பாயில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களிடையே உரையாற்றிய கோல்வால்கர்: “சங்பரிவாரத்தின் சார்பில் திரு. ஜின்னாவிற்கு நான் எனது அன்பைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்” என்று அறிவித்தார். அவர் அந்தத் தொடர்பை ஏற்றுக் கொண்டதுடன், அவர்கள் எவ்வாறு ஒருவருக்கொருவர் ‘நிரப்பியாகச்’ செயல்பட்டார்கள் என்பதையும் ஒப்புக்கொண்டார்.

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிப்ரவரி 4, 1948 அன்று இந்திய அரசு ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குத் தடை விதித்தது. அரசியலில் நேரடியாகப்பங்கேற்பதை விட, ஒரு கலாச்சார அமைப்பாகச் செயல்படஆர்.எஸ்.எஸ் ஒப்புக்கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, ஜூலை10, 1949 அன்று தடை நீக்கப்பட்டது. அதன்பின்னர் அது தனது செல்வாக்கின் கீழ் ஒரு அரசியல் அமைப்பை நிறுவ உதவியது.1951 இல், பாஜகவின் முன்னோடியான பாரதிய ஜனசங்கம் நிறுவப்பட்டது.ஜனசங்கத்தின் அரசியல் வாரிசும், ஆர்.எஸ்.எஸ்ஸின் முதன்மை அரசியல் கருவியுமான பாஜக அரசுஅதிகாரத்தைக் கைப்பற்றிய நிலையில், சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகிய அரசியலமைப்புத் தத்துவங்களைச் சீர்குலைத்து, இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை சகிப்புத்தன்மையற்ற ‘இந்துத்துவ ராஷ்டிரமாக’ மாற்ற முயல்கிறது. பாபர் மசூதி இடிப்பு, அரசியலமைப்புக் கடமைகளை மீறி மதஅணிதிரட்டலை அனுமதிப்பதன் ஆபத்துகளை நிரூபித்தது.

இந்திய மதச்சார்பின்மை என்பது மதத்திற்குரிய இடத்தை மறுப்பதன் அடிப்படையில் அமைந்தது அல்ல; அது மதத்தையும் அரசையும் பிரித்து வைப்பதன் அடிப்படையில் அமைந்தது. இந்துத்துவ திட்டம் இந்த பன்முகத்தன்மை கொண்ட தேசத்தைப் பெரும்பான்மைவாதத்தின் மூலம் மறுவரையறை செய்ய முயல்கிறது, இதில் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் தங்கள் தேசபக்தியை மீண்டும் மீண்டும் நிரூபிக்க வேண்டியுள்ளது. கம்யூனிஸ்டுகள் மீது பொய் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் சுமத்துவதன் மூலம் இந்திய அரசியலில் தனது பிளவுபடுத்தும் பாத்திரத்தை ஆர்.எஸ்.எஸ்ஸால் மறைக்க முடியாது. ஆனால் கோயபல்ஸின் தீவிர ஆதரவாளர்களிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் ஆகும்.பீப்பிள்ஸ் டெமாக்ரசி, அக்டோபர் 18, 2026தமிழில் சுருக்கம் : எஸ்பிஆர்