தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

விளையாட்டு

31 Oct 2026, 10:16 pm
விளையாட்டு

விளையாட்டு

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் இலங்கை, வங்கதேசம், கென்யா அணிகளுக்கு வெண்கலம்

காமன்வெல்த் கபடி சாம்பியன்ஷிப் தொடரின் முதல் பதிப்பு குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில்நடைபெற்று வந்தது. இந்த தொடர் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் கபடியை இணைப்பதைஊக்குவிக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆடவர் பிரிவில் 13 அணிகளும், மகளிர் பிரிவில் 10 அணிகளும் பங்கேற்றன.

கென்யாவுக்கு 2 வெண்கலம்இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற அரையிறுதிப் போட்டி முடிவில் இந்திய அணி,வங்கதேசத்தையும் (56-27),இலங்கை அணி (28-24) கென்யாவையும் வீழ்த்தின. இதன்மூலம் அரையிறுதியில் தோல்வியடைந்த கென்யா, வங்கதேசம் வெண்கலப்பதக்கங்கள் வென்றன. அதே போல மகளிர் பிரிவில் இந்தியா - இலங்கை (39-14) அணியையும், உகாண்டா - கென்யா (23-21) ணியையும் வீழ்த்தி, இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றன. எனினும் அரையிறுதியில் விளையாடிய - இலங்கை,கென்யா மகளிர் அணிகள் வெண்கலம் வென்றன. (இறுதிப் போட்டிக்கு முன்னர் மட்டும்).

இந்தியா - நியூஸி., அணிகளுக்கு இடையே இன்று கடைசி டி-20 போட்டி

டி-20, ஒருநாள், டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளைக் கொண்ட தொடர்களில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி நியூஸிலாந்து நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

இந்தச் சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வாக தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிக

ளைக் கொண்ட டி-20 தொடரின் முதல் 4 போட்டி முடிவில் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில், 5ஆவது மற்றும் கடைசி டி-20 போட்டி விடுமுறை நாளான ஞாயிறன்று ஹாமில்டனில் நடை

பெறுகிறது. இந்திய அணி ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றியுள்ளதால், இந்த போட்டி இரு அணிகளுக்கும் எந்தவித முக்கியத்துவத்தையும் அளிக்காது. அதனால் ஹாமில்டன் டி-20 போட்டி வெறும் சம்பிரதாய போட்டி

யாகதான் நடைபெறும் என்றாலும், வெற்றியுடன் ஒருநாள் தொடருக்கு யார் முன்னேறுவது என்ற வேட்கையுடன் இரு அணிகளும் விளையாடும் என்பதால், இந்தப் போட்டி பரபரப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - நியூஸிலாந்து

இடம் : சீட்டோன் பார்க், ஹாமில்டன்

நேரம் : மதியம் 12:30 மணி (இந்திய நேரம்)

சேனல் : சோனி ஸ்போர்ட்ஸ், சோனி லைவ் (ஓடிடி)

“ஜடேஜாவின் ஒருநாள் போட்டி பயணம் முடிவுக்கு வருகிறது”

அடுத்த வாரம் தொடங்க உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் (37) பெயர் சேர்க்கப்படவில்லை. இதுதொடர்பாக இந்திய அணியின் முன்னாள் வீரர் புஜாரா கூறுகையில்,”ஒருநாள் கிரிக்கெட்டில் அக்சர் படேல் முதன்மை ஆல்-ரவுண்டராக அதிக வாய்ப்புகள் வழங்கப்படுவதால், ஜடேஜா தேர்ந்தெடுக்கவில்லை. அதனால் ஜடேஜாவின் ஒருநாள் கிரிக்கெட் பயணம் விரைவில் முடிவுக்கு வரலாம்” என அவர் கூறினார். ஜடேஜா தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.