விளையாட்டு
24 Jul 2026, 9:39 pm

தொடங்கியது காமன்வெல்த் போட்டிகள் மணிப்பூர் வீராங்கனை தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்

காமன்வெல்த் தொடரின் 23ஆவது சீசன் ஐரோப்பா நாடான ஸ்காட்லாந்தின் கிளாஸ்க்கோ நகரில் இந்திய நேரப்படி வியாழனன்று நள்ளிரவு பிரம்மாண்ட விழாவுடன் தொடங்கின. தொடக்க விழாவை இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் ராணி கேமீலா தொடங்கி வைத்தனர். பிரிட்டன் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து நாடு களின் அணிவகுப்பு நடைபெற்றது. 126 வீரர் - வீராங்கனைகள் அடங்கிய இந்திய குழு கம்பீரமாக அணிவகுத்து சென்றது. இந்தியக் குழுவின் அணி வகுப்பில் ஒலிம்பிக் பதக்க நாயகியும், பாஜகவின் வகுப்பவாத அரசியலால் வன்முறை பூமியாக காட்சியளிக்கும் மணிப்பூர் மாநிலத்தின் மீராபாய் சானு தேசியக் கொடியை ஏந்திச் சென்றார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச் சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் பாரம்பரியமிக்க ‘கிங்ஸ் பேட்டன் (King’s Baton)’ ஏந்தி இந்திய அணியை வழிநடத்தி னார். ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களும் இந்த அணிவகுப்பில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ஊக்கமருந்து விவகாரத்தால் பின்னடைவு : 2 இந்திய வீரர்கள் நீக்கம்

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் ஊக்கமருந்து விவகாரத்தால் 2 இந்திய வீரர்கள் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூடோ வீரர் அருண் குமார் ஊக்க மருந்து தடுப்பு முகமையின் பரிசோத னையில் தோல்வியடைந்ததை அடுத்து அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து விலக் கப்பட்டுள்ளார். 73 கிலோ எடைப் பிரி வில் பங்கேற்க இருந்த அருண் குமார், சர்வதேச அளவில் பல தங்கப் பதக்கங் களை வென்றவர் என்பதால் இவர் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவி இருந்த நிலை யில், அவர் நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தி யில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பளுதூக்கும் வீரர் தில்பாக் சிங்கும் கிளாஸ்கோவில் இருந்து இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளார். இவர் நேரடியாக ஊக்க மருந்து சோதனையில் சிக்கவில்லை என்றாலும், இந்திய பளுதூக்கும் வீரர்கள் கடந்த ஜூன் 1, 2025 முதல் ஜூலை 22, 2026 வரையிலான கால கட்டத்தில் 5 முறை ஊக்கமருந்து சோத னைகளில் சிக்கியுள்ளனர். காமன்வெல்த் விதிகளின்படி, தொடர் விதிமீறல்களால் இந்திய பளுதூக்கும் அணியின் தகுதி இடங்கள் 16-லிருந்து 11 ஆகக் குறைக்கப்பட்டன. இதனால் அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

ஆடாமலேயே ஜெயிச்சுட்டோம்!

காமன்வெல்த் போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் களம் இறங்குவதற்கு முன்பே தனக்கான பதக்கத்தை உறுதி செய்துள்ளார். மகளிர் 75 கிலோ எடைப் பிரிவில் போட்டியிடும் லவ்லினாவிற்கு முதல் சுற்றில் பை (நேரடி முன்னேற்றம் - இந்த எடைப் பிரிவில் மொத்தம் ஐந்து போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பதால்) கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளின் குத்துச்சண்டை விதிகளின்படி, அரையிறுதிக்கு முன்னேறும் அனைத்து வீரர்களுக்கும் குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் உறுதி செய்யப்படும். இதன் மூலம், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 28 வயதான லவ்லினா, தனது பதக்கப் பட்டியலில் இதுவரை இல்லாத ஒரு முக்கிய பதக்கத்தை தற்போதே உறுதி செய்துள்ளார்.