விளையாட்டு
23 Jul 2026, 9:35 pm

விளையாட்டு

காமன்வெல்த் பதக்கப் போட்டிகள் இன்று முதல் தொடக்கம்

காமன்வெல்த் கூட்டமைப் பில் இந்தியா, பாகிஸ் தான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா என மொத்தம் 56 நாடுகள் உள் ளன. இந்த நாடுகளுக்கு ஒலிம்பிக் போட்டிகள் போன்று 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி காமன்வெல்த் தொடரின் 23ஆவது சீசன் ஐரோப்பா நாடான ஸ்காட்லாந்து நாட்டில் வியாழனன்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கின. ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள பிரபல ‘தி ஹைட்ரோ’ அரங்கில் இந்திய நேரப்படி வியாழ னன்று இரவு காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டிகளுக்கான தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை பதக்கப் போட்டிகள் தொடங்குகின்றன. பதக்கத்திற்கான போட்டிகள் காமன்வெல்த் போட்டிகளின் தொடக்க விழா பொதுவாக திறந்த வெளியிலேயே நடைபெற்று வந்தன. ஆனால் வரலாற்றில் முதல் முறையாக, மூடப்பட்ட அரங்கிற்குள் 23ஆவது சீசன் தொடக்க விழா நடத்தப்பட்டது. ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் 74 நாடுகளைச் சேர்ந்த 3,000-த்திற்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் - வீராங்க னைகள் 215 பிரிவு போட்டிகளுக்கு பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

இந்தியா சார்பில் 126 பேர்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் கொண்ட அணி 8 விளையாட்டுகளில் களம் காணுகிறது. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களான ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, பளு தூக்குதல் வீராங்கனை மீரா பாய் சானு, குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா மற்றும் ஜாஸ்மின் லம்போரியா, பிரீத்தி பவார், தமிழ்நாட்டின் விஷால், உயரம் தாண்டுதல் வீரர் சர்வேஷ் குஷாரே, நீளம் தாண்டுதல் வீரர் முரளி ஸ்ரீசங்கர், குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால் சிங், வட்டு எறிதல் வீராங்கனை சீமா கலிரம்மா, ஜூடோ வீராங்கனை துலிகா மான் உள்ளிட்டோர் பதக்கம் வெல்லும் வாய்ப்பில் இருக்கிறார்கள்.

கிரிக்கெட் இல்லை

2026 காமன்வெல்த் போ ட்டியை நடத்தும் உரிமை முதலில் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்துக்கு வழங்கப்பட்டது. ஆனால் போட்டி யை நடத்துவதற்கான செலவு ரூ.17,200 கோடியில் இருந்து ரூ.40,000 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டதால், 2023இல் விக்டோரியா விலகியது. ஏற்கெனவே தேவையான உள்கட்டமைப்பு வசதி கள் இருந்ததால் போட்டியை நடத்த ஸ்காட்லாந்து முன்வந்தது. ஸ்காட்லா ந்தில் காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் உள்ளூர் அமைப் பாளர்கள், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் போட்டியை நடத்தி முடிக்கத் திட்டமிட்டனர். இதற்காக கடந்த முறை பர்மிங்ஹாமில் (இங்கி லாந்து) 19 விளையாட்டுகள் இடம்பெ ற்றிருந்த நிலையில், கிளாஸ்கோவில் வெறும் 4 விளையாட்டு மையங் களை மட்டும் பயன்படுத்தி 10 விளை யாட்டுகள் மட்டுமே நடத்த முடிவு செய்யப்பட்டது. கடுமையான நிதி சிக்கனம் மற்றும் பட்ஜெட் கட்டுப்பாடு கள் காரணமாக, பர்மிங்ஹாம் 2022 இல் இடம்பெற்ற மகளிர் டி-20 கிரிக்கெட் போட்டியோடு சேர்த்து, ஹாக்கி, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், மல்யுத்தம் மற்றும் ரக்பி உள்ளிட்ட பல புகழ்பெற்ற விளை யாட்டுகளும் 2026 பட்டியலிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டன. இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு கடந்த 2022-ஆம் ஆண்டு போட்டி யில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை அறுவடை செய்து இந்தியா 4ஆவது இடத்தைப் பிடித்தது. ஆனால், கடந்த முறை இடம்பெற்றிருந்த பேட்மிண்டன், கிரிக்கெட், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டு கள் இந்த சீசனில் இல்லை. இத னால், இந்தியாவின் பதக்க வேட்டை க்குப் பாதிப்பு உண்டாகியுள்ளது. இதேபோல் தொடர்ந்து 2-ஆவது முறையாக துப்பாக்கி சுடுதலுக்கும் இடம் மறுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.