பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி
8 Apr 2026, 5:30 am

பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

நாமக்கல், ஏப்.7 குமாரபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் கொண்டு வரப்படும் என ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு வாக்குச் சேகரிப்பின் போது கூறினார். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் காமராஜ் போட்டியிடுகிறார்.

இவரை ஆதரித்து டி.ஆர்.பாலு நேற்று வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், குமாரபாளையம் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

காவிரி ஆற்றை பாதுகாக்கவும், சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்கவும் பொது சுத்திகரிப்பு நிலையம் அவசியம். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றார்.