முந்தய பக்கம்

பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

8 Apr 2026, 5:30 am
பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

பொது சுத்திகரிப்பு நிலையம்: திமுக வேட்பாளர் பாலு உறுதி

குமாரபாளையத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பாடுபடுவேன் என திமுக வேட்பாளர் எஸ்.பாலு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.பாலு குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், குமாரபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காவிரி ஆற்று ஓரத்தில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

இந்த கோரிக்கையை நிறைவேற்ற நான் பாடுபடுவேன். மேலும் காவிரி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram