அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வு!சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு
8 hours before

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்வு!சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு

சென்னை, ஆக. 28 -அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி கடுமையாக உயர்ந்து வருவது பற்றி, எதிர்க்கட்சிகள் சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்தன.

வெள்ளிக்கிழமை (ஆக.28) அன்று காலை 9.30 மணிக்குக் கூடிய தமிழ்நாடு சட்டப்பேரவையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வு குறித்து, கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தார். அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அனைத்துப் பொருட்களின்விலையும் கடந்த மூன்று மாதங்

களில் பன்மடங்கு உயர்ந்துள்ள தாகவும், இந்த அரசு பொறுப்பேற்ற திலிருந்து விலைவாசி நாடத் தயங்குவதாக கூறிய அவர், 2007-ஆம் ஆண்டு தேசிய அளவில் விலைவாசி உயர்ந்தபோது, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ரேசன் கடைகளில் அரிசி, எண்ணெய், ரவை ஆகியவற்றைக் குறைந்த விலையில் வழங்கியதை நினைவுகூர்ந்து, தற்போதும் ரேசன் கடைகள் மூலம் கூடுதல் பொருட்கள் வழங்கவும், முதலமைச்சர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் கோரிக்கைவைத்தார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், வறட்சியால் அரிசி வரத்து குறைந்துள்ளதாகவும், அதிமுக ஆட்சியின்போது, விலை உயரும் பொருட்கள், மற்ற உற்பத்தி மாநிலங்களிலிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம்குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், விலை கட்டுப்பாட்டு நிதியாக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு விலை உயர்வுக் காலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி,தற்போதைய அரசின் நட வடிக்கை என்ன, என வினவினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழுத் தலைவர் ஆர். செல்லசுவாமி பேசுகையில், பெட்ரோல் - டீசல்-கேஸ் விலைஉயரும் போதெல்லாம் அத்தியாவசியப் பொருட்களும் விலைவாசியும் உயர்வதும், மக்கள் பாதிக்கப்படுவதும் வழக்கமாகி விட்டதாகக் குறிப்பிட்டார். இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் ரேசன் கடைகள் மூலம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் டி. ராமச்சந்திரன், சர்க்கரை விலை கிலோ ரூ.70 -80 வரை உயர்ந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, அனைத்துப் பொருட்களையும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கொண்டுவர வேண்டும் எனக் கோரினார். பாமக, காங்கிரஸ் உறுப்பினர்களும் இதே கருத்தை வலியுறுத்தினர்.

அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கருத்துக்குப் பதிலளித்த உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர்வெங்கடரமணன், ஈரான் போரால் பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்ததால் நாடு முழுவதும் அத்தியாவசியப்பொருள் விலை உயர்ந்துள்ளதாக வும், தமிழ்நாடு மட்டும் அல்ல பல மாநிலங்களிலும் இதே நிலை உள்ள தாகவும் தெரிவித்தார். தினமும் 41 பொருட்களின் விலை உயர்வு கண்காணிக்கப்படுவதாகவும், அரிசி, சர்க்கரை, வெங்காயம், தக்காளிஉள்ளிட்டவற்றின் விலைகள் அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

வாராந்திர விலை கண்காணிப்புக் குழுக்கள் மூலம் விலையேற்றத்திற்கான காரணங்களை ஆராய்ந்து வருவதாகவும், ரேசன் கடைகள் மற்றும் பசுமை கடைகள் மூலம்குறைந்த விலையில் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், தட்டுப்பாடின்றி பொருட்களை வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தார்.