விரிவடைந்த கேரள மாநிலக்குழு
yesterday
<p><strong>விரிவடைந்த கேரள மாநிலக்குழு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநிலக் குழுவின் விரிவடைந்த கூட்டம் கோழிக்கோட்டில் ஞாயிறன்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தின் துவக்கமாக, மூத்த தலைவர் பாலோலி முகமது குட்டி செங்கொடியை ஏற்றி வைத்தார். பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி துவக்கவுரையாற்றினார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள், பினராயி விஜயன், அசோக் தாவ்லே, உ. வாசுகி, விஜூ கிருஷ்ணன், பி.வி. ராகவலு, ஏ. விஜயராகவன் மற்றும் கேரள மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன் மாஸ்டர், மாநிலக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சியின் வர்க்க, வெகுஜன அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் உட்பட மொத்தம் 307 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். (விரிவான செய்தி பக்கம் : 2 )</p>
