தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்சனை: உயர்மட்டக்குழு முடிவுக்கு கட்டுப்பட உறுதி

22 Dec 2025, 4:02 am
ஜம்புக்கல் மலை ஆக்கிரமிப்பு பிரச்சனை: உயர்மட்டக்குழு முடிவுக்கு கட்டுப்பட உறுதி
<p>உடுமலை,டிச.22 - ஜம்புக்கல் மலை ஆக்கிரப்பை &nbsp;தடுக்கக் கோரி 13 நாட்கள் விவசா யிகள் மற்றும் விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் மலை அடிவாரத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். &nbsp;இதையடுத்து நடைபெற்ற அமைதிப் &nbsp;பேச்சுவார்த்தையில் ஆட்சியர் அமைத்த உயர்மட்டக்குழு நில அள வீடு செய்யும் வரை தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திங் களன்று கோட்டாட்சியர் குமார் &nbsp;தலை மையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஜம்புக்கல் மலையில் &nbsp;பட்டா வழங்கப்பட்ட பிரச்சனையில், &nbsp;திருப்பூர் மாவட்ட ஆட்சியரால் உயர் மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு நிலஅளவைப் பணி மேற்கொண்டு அரசு நிலங்கள் (வனம் /அரசு) மற்றும் பட்டா நிலங்களின் எல் லைகளைக் கண்டறிவது பற்றி முடிவு &nbsp;செய்யப்படும் வரை வேறு எந்த பணி களும் இங்கு செய்யப்படக்கூடாது. மேற்படி நிலத்தில் எவ்வித கனரக &nbsp;வாகனங்கள் மற்றும் வெடிமருந்து பொருட்களைக் கொண்டு விவசா யம் மற்றும் எவ்விதமான அபிவி ருத்தி வேலைகளும் செய்யக் கூடாது. இம்மலை பகுதியில் வேலை செய்து வந்த 7 கனரக வாகன &nbsp;உரிமையாளர்கள் மற்றும் பூமியின் &nbsp;உரிமையாளரிடம் நில அளவை மேற் கொண்டு அரசு நிலம் என உறுதி செய் யப்படும் பட்சத்தில் அரசு எடுக்கும் &nbsp;நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவ தாக உறுதிமொழிப் பத்திரம் அமரா வதி காவல் ஆய்வாளரிடம் ஒப்ப டைத்த பின்னர் வாகனங்களை எடுத் துக் கொள்வது, நிலம் பற்றி முடிவு &nbsp;செய்யும் வரை இரும்பு கதவை பூட்டக் கூடாது. மேலும் பட்டாதாரர் விவசாயப் பணி செய்ய எவ்வித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் உடுமலை வட் டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்து றையினர், காவல்துறை அதிகாரி கள், அமராவதி வனச்சரக அதிகாரி கள் மற்றும் விவசாயிகள், விவசாய பாதுகாப்பு &nbsp;சங்கத்தினர்கள் பங்கேற் றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.