தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

முக்கால் நூற்றாண்டு கடந்தும் முனைப்புடன் தொடரும் ஈடுபாடு - ஜி.ராமகிருஷ்ணன்

12 Nov 2025, 3:20 pm
முக்கால் நூற்றாண்டு கடந்தும் முனைப்புடன் தொடரும் ஈடுபாடு - ஜி.ராமகிருஷ்ணன்

முக்கால் நூற்றாண்டு கடந்தும் முனைப்புடன் தொடரும் ஈடுபாடு

மதுரை மாவட்டத் தில் களப்பணி யாற்றிய பல தோழர் களை இந்தத் தொட ரில் ஏற்கெனவே சந்தித் திருக்கிறோம். இப்போது நாம் சந்திக்க இருப்பது தோழர் ஏ. ராமராஜ். அலங்காநல்லூர் ஒன்றியம் தேவசேரி கிராமத்தில் ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ராமராஜ். போதிய வருமானம் இல்லாத நிலையில்  தந்தையாரால் இவரை ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. அந்தச் சிறு வயதிலேயே தன்னுடைய தந்தைக்கு உதவியாக இவரும் வயலில் இறங்கினார்.

அக்காலத்தில் தேவசேரி போன்ற கிராமங்களில் சாகுபடியாகும்  நெல்லையும் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளையும் விவசாயிகள் மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு மதுரை நகருக்குள் சென்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இருந்த சந்தையில் விற்பனை செய்வது வழக்கம். இதனால் ராமராஜ் அடிக்கடி மதுரை நகருக்கு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மதுரைக்கு வந்து திரும்புகிறபோதெல்லாம் நகரின் பல பகுதிகளிலும், வழியில் உள்ள கிராமங்களிலும் சிவப்புக் கொடி பறப்பதைப் பார்த்திருக்கிறார். ஊருக்குள் வந்த செங்கொடி கம்யூனிஸ்ட் கட்சி அந்நியர் ஆட்சிக்கு எதிராகவும்,  பஞ்சாலை உள்ளிட்ட ஆலைத் தொழி லாளர்களுக்காகவும் போராடியதோடு, கிராமங் களில் விவசாயிகள், குத்தகை விவசாயிகள், விவ சாய தொழிலாளர்கள் கோரிக்கைகளுக்காகவும் எண்ணற்ற இயக்கங்களை நடத்தியிருக்கிறது. இதனால் மதுரை நகரில் மட்டுமல்லாமல், மதுரை மாவட்ட கிராமப்புறங்களிலும் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டப்பட்டிருந்தது.

தொடக்கக் காலத்தில் தோழர்கள் என். சங்க ரய்யா, கே.பி. ஜானகியம்மாள் உள்ளிட்ட பல தலை வர்கள் கிராமம் கிராமமாகச் சென்று விவசாயி களைத் திரட்டுவதில் முனைப்புடன் செயல்பட்ட னர். குறிப்பாக கே.பி. ஜானகியம்மாள் விவசாயி களைத் திரட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்தி னார். விவசாயிகளுக்காகவும், கிராம மக்களின் கோரிக்கைகளுக்காகவும் அவர் தலைமையில் வலுவான பல போராட்டங்கள் நடந்தன. கிராமங் களில் மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை கே.பி. ஜானகி யம்மாள் கட்சி என்றே அழைப்பார்கள். இளைஞர் ராமராஜ் பல்வேறு இடங்களில் கம்பீரமாக ஒளிர்ந்த சிவப்புக் கொடிகளைப் பார்த்ததோடு, மதுரை சென்றபோது கம்யூனிஸ்ட் கட்சி பொதுக்கூட்டங்களில் தலைவர்கள் பேச்சை கேட்கவும் செய்தார். அந்த உரைகள் தந்த உணர் வோடு, செங்கொடியைத் தன்னுடைய கிராமத்தி லும் உயர்த்திட வேண்டுமென முடிவு செய்தார். மதுரை கோவில் எதிரே  புதுமண்டபத்தில் ஒரு தையல்காரரை அணுகி தனக்கு சிவப்புக் கொடி தைத்துக் கொடுக்கக் கேட்டிருக்கிறார். அந்த தையல் காரர் எதிர்க் கடையிலிருந்து சிவப்பு, வெள்ளை துணி களை வாங்கி வரச் சொல்லி இரண்டு கொடிகளைத் தைத்து கொடுத்திருக்கிறார்.

அதற்குக் கூலி எவ்வ ளவு என்று இவர் கேட்டபோது, “இதற்கு தையற்கூலி வேண்டாம் தம்பி - நானும் இந்தக் கட்சிதான்,” என்று அவர் கூறியிருக்கிறார். ராமராஜ் கொடிகளை தேவசேரி கிராமத்திற்கு  எடுத்து வந்துவிட்டார், ஆனால் அவற்றைக் கம்பத் தில் பறக்கவிடுவது எளிதாக நடந்துவிடவில்லை. தனது வீட்டிற்கு அருகில் ஒரு உயரமான கம்பில் கொடியைக் கட்டி நடுவதற்கு முயன்றார். கிராமத்தில் ஏற்கெனவே காங்கிரஸ் கொடிகளும் திராவிடர் கழகக் கொடிகளும் பறந்துகொண்டிருந்தன. கம்யூ னிஸ்ட் கட்சிக் கொடியை ஏற்றுவதற்கு ராமராஜ் முயற்சி செய்தபோது கிராமத்தைச் சார்ந்த பலர் தடுக்க முற்பட்டனர். தகவல் அறிந்து அங்கே வந்து சேர்ந்த ராமராஜ் உறவினர்கள், “ஏற்கெனவே இரண்டு கட்சிகளின் கொடிகள் பறக்கிறபோது செங்கொடியை ஏற்றினால் என்ன தவறு,” என்று இவருக்கு ஆதரவாக வாதிட்டனர். “அந்தப் பின்னணியில் 1951ஆம் ஆண்டு முதன்முதலாக தேவசேரி கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கொடியை  ஏற்றினேன்,” என்று உணர்ச்சிப் பூர்வமாக அந்தப் பெருமித நாளை நினைவுகூர்ந்தார். உருவானது ஆதரவாளர் குழு தேவசேரியில் கம்யூனிஸ்ட் கட்சி கொடி ஏற்றப் பட்டதை அறிந்த கட்சியின் நிலக்கோட்டை வட்டச் செயலாளர், ராமராஜைச் சந்தித்துப் பேசினார்.

கிராமத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளர் குழுவைத் தொடங்கினார்கள். அந்த குழுவிற்கு ராம ராஜ்  செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அன்றி லிருந்து ராமராஜ் கிராமங்களிலும், நகரிலும் நடத்தப்பட்ட செங்கொடி இயக்கத்தின் எல்லாப் போராட்டங்களிலும் கலந்துகொண்டார். 1957ஆம் ஆண்டு விலைவாசி உயர்வைக் கண்டித்து நிலக்கோட்டையில் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தை கே.பி. ஜானகியம்மாள் தொடங்கிவைத்தார். பின்னர் மது ரையில் நடக்கும் போராட்டத்தில் கலந்து கொள்வ தற்காக சென்றுவிட்டார்.

0அவர் சென்ற பிறகு அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற உ.ச. உலகப்பா, ஏ. ராமராஜ் உள்பட பல தோழர்கள் கைது செய்யப்பட்டு திருச்சிராப்பள்ளி சிறையில் அடைக்கப் பட்டார்கள். 21 நாட்களுக்குப் பிறகே விடுதலை செய்யப்பட்டனர். ராமராஜ் ஒருமுறை கோவை நகரத்திற்கு சொந்த வேலையாக சென்றபோது அங்கு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இயக்கத்தில் கலந்துகொண்டார். அந்தத் தோழர்களுடன் இவரும் கைதாகி கோவை சிறையில் 15 நாட்கள் இருந்திருக்கிறார். அக்காலத்தில் அலங்காநல்லூர், முடுவார் பட்டி, பாலமேடு பகுதிகள் இரட்டை உறுப்பினர் தொகு தியான நிலக்கோட்டையுடன் இணைந்திருந்தன. இந்த தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் பட்டிவீரன்பட்டி சந்திரசேகரன், ஏ.எஸ். பொன்னம் மாள் இருவரும் வெற்றி பெற்றனர்.

பாலமேடு பகு தி மக்களுக்கு நன்றி சொல்ல இருவரும் வந்தனர். அணைகள் எழுந்தன அப்போது பெய்த கடும் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து இருவரும் பாலமேட்டைத் தாண்டி வர முடியாமல் போனது. மலைப் பகுதியி லிருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர் அந்த  வட்டாரத்தையே வெள்ளக்காடாக்கியது. ராமராஜ்,  கிராம விவசாயிகளுடன் சட்டமன்ற உறுப்பினர் களைச் சந்தித்து அங்கே அணை கட்டினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எடுத்துக் கூறினார்.

மேலும், ராமராஜ் தலைமையில் விவ சாயிகள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மஞ்ச மலை, கிளுமலை ஆகிய இடங்களிலும் அணைகள் கட்ட  வலியுறுத்தினார்கள்.  கோரிக்கைகள் ஏற்கப்பட்டு 1962ஆம் ஆண்டு  சாத்தியாறு அணை கட்டப்பட்டது. இந்த  அணையின் மூலம் 12 கண்மாய்களுக்கு நீர் கிடைத்து,  வேளாண்மைக்குப் பாசன வசதி அமைந்தது. ஆனால் தேவசேரி, ஊர்சேரி கண்மாய்களுக்கு சாத்தியாறு அணை நீர் கிடைக்கவில்லை. மீண்டும் ராமராஜ் முயற்சி மேற்கொண்டு, நீண்ட நெடிய போராட்டத்தை நடத்தினார்.

மக்கள் ஆதரவுடன் நடந்த அந்தப் போராட்டத்தின் பலனாக தேவசேரி கண்மாய்க்கும் தற்போது தண்ணீர் வருகிறது. 1967இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தோழர் பி. ராமமூர்த்தி மதுரை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். வாக்கு சேகரிப்பதற்காக அவர் தேவ சேரி, முடுவார்பட்டி பகுதிகளுக்கு வரத் திட்டமிட்டி ருந்தார். ஆனால் பாலமேட்டிலிருந்து இந்த கிராமங்களுக்கு வர உரிய வசதிகள் இல்லை. “நான் மாட்டு வண்டியை எடுத்துக் கொண்டு முடுவார் பட்டி பிரிவிலிருந்து தோழரை எங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்தேன்,” என்று தெரிவித்த அவரின் குரலில் பெருமை தொனிக்கிறது. பி. ராமமூர்த்தி அத்தேர்தலில் வெற்றி பெற்றார்.  மதுரை மாவட்ட கிராமப்புறங்களில் கே.பி. ஜானகியம்மாள் தலைமையில் நடைபெற்ற  விவ சாயிகள் போராட்டங்கள் அனைத்திலும் ராமராஜ் பங்கேற்றிருக்கிறார். பலமுறை சிறைக்கும் சென்றி ருக்கிறார். இதனால் அலங்காநல்லூர், வாடிப்பட்டி பகுதிகளில் பெரும்பான்மையான கிராமங்களில் விவசாயிகள் சங்கக் கிளைகள் உருவாகின. அத்துடன் கம்யூனிஸ்ட் கட்சி கிளைகளையும் உரு வாக்கிட ராமராஜ் முக்கிய பங்காற்றினார். “மறைந்த தோழர்கள் பெருமாள், கண்ணுசாமி ஆகியோரும் அன்று அலங்காநல்லூர் ஒன்றியத்தில் கட்சி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்கள்,” என்று தேவசேரி தோழர் நல்லகுமார் கூறுகிறார். கரும்பு விவசாயிகளுக்காக... அலங்காநல்லூரில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை  2021 ஆம் ஆண்டில் மூடப்பட்டது.

இதனால் கரும்பு விவசாயிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளா னார்கள். பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளைத் திரட்டி அனைத்துக் கட்சிகளின் பங்களிப்போடு ஆலையைத் திறக்கக் கோரி 2023இல்  போராட்டம் நடைபெற்றது. தினமும் 500 முதல் 1000 பேர் வரையில் விவசாயிகள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். ஆலை வளாகத்திற்குள் நடந்த 48 நாள் தர்ணா போராட்டத்திற்குப் பிறகு அரசாங்கம் ஆலையைத் திறக்க உறுதியளித்தது.  இப்போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பழனிச்சாமி, ராமராஜ் இருவரும் தலையாய பங்காற்றியிருக்கிறார்கள். நாள்தோறும் போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உணவு அளிப்பது உள்ளிட்ட எல்லா ஏற்பாடு களையும் ராமராஜ்தான் செய்தார் என்று தோழர் பழனிச்சாமி குறிப்பிடுகிறார். அரசாங்கம் அளித்த வாக்குறுதிப்படி ஆலை திறக்கப்படவில்லை. மீண்டும் இந்த நவம்பர் 18ஆம் தேதி கரும்பு விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் போராட்டம்  தொடங்க இருப்பதாகத் தோழர்கள் தெரிவித்தார்கள். வயது தடையில்லை 3 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம் குருவித்துறையிலிருந்து சமயநல்லூர் வரை விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி நடைபெற்ற நடைபயண இயக்கத்திலும் ராமராஜ் பங்கேற்றிருக்கிறார்.

அவருக்கு வயது ஒரு பொருட்டே அல்ல என்று சக தோழர்கள் பெருமிதத்துடன் கூறுகிறார்கள். நடுத்தர விவசாயியான தோழர் ராமராஜ் கிராமத்தில் உள்ள தனது நிலத்தை விற்றுவிட்டு தற்போது கோவை மாவட்டத்தில் தனது மகனுடன் வாழ்ந்து வருகிறார். நிலத்தை விற்றுக் கிடைத்த பணத்திலிருந்து கட்சியின் மதுரை புறநகர் மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியக்குழுவிற்கு கட்டடம் கட்ட மனை வாங்குவதற்காக ரூபாய் 1 லட்சம் நிதி அளித்திருக்கிறார். அவர் கோவையில் தனது மகனோடு வசித்து வந்தாலும் தனது தள்ளாத வயதிலும் மதுரையில் போராட்டங்களோ முக்கிய இயக்கங்களோ  நடந்தால் நேரில் வந்து கலந்துகொள்கிறார்.

1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது தோழர் ராமராஜ் அதில் தன்னை இணைத்துக் கொண்டார். தோழர் ராமராஜ் கிளைச் செயலாளராகப் பலமுறை தேர்வு செய்யப்பட்டு இயங்கியிருக்கிறார். கட்சியின் இடைக் குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றி யிருக்கிறார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் வட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டிருக்கிறார். விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட, மாநில மாநாடு களில் தவறாமல் கலந்து கொள்வார். இவருடைய இணையர் பாப்பாத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தில் செயல்பட்டிருக்கிறார். 1971ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் தோழர் பெரியசாமி வெற்றி பெற்று ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டார். அந்த வெற்றியில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு.

தேவசேரி, முடுவார்பட்டி பகுதிகளில் அக்கா லத்தில் கட்சி தலைவர்கள் பி. ராமமூர்த்தி, என்.  சங்கரய்யா, ஏ. பாலசுப்பிரமணியம், ஏ. நல்ல சிவன், கே.பி. ஜானகியம்மாள் உள்ளிட்டோர் கலந்து  கொண்ட பல கூட்டங்களில் தானும் கலந்து கொண்டதை ராமராஜ் பெருமையாக கூறினார். தற்போது 91 வயதாகும் தோழர் ராமராஜ் கட்சி உறுப்பினராக இருந்து கொண்டு தன்னால் இயன்ற கட்சி பணியை ஆர்வத்தோடு செய்து வருகிறார். தோழர் ராமராஜ் போன்றவர்கள் அக்காலத்தில் உருவாக்கிய கட்சி கட்டமைப்பு தான் இன்றளவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டிற்கு அடித்தளமாக அமைந்துள்ளது எனில் மிகையில்லை. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு மேலாக, இளையோருக்கு ஒரு முன்னுதாரணக் கம்யூனிஸ்ட் போராளியாகத் தோழர் ராமராஜ் நிறைவேற்றிவரும் இயக்கப் பணி பாராட்டுக்குரியது, பின்பற்றத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.