வணிக எரிவாயு சிலிண்டர் விலையேற்றம், தட்டுப்பாடு கடும் பாதிப்புகளை சந்திக்கும் தொழில் வர்த்தகத் துறை
5 May 2026, 11:29 pm

வணிக எரிவாயு சிலிண்டர் விலையேற்றம், தட்டுப்பாடு கடும் பாதிப்புகளை சந்திக்கும் தொழில் வர்த்தகத் துறை

வணிக எரிவாயு சிலிண்டர் விலையேற்றம், தட்டுப்பாடு கடும் பாதிப்புகளை சந்திக்கும் தொழில் வர்த்தகத் துறைபதும் திருப்பூர் மாவட்டத்தில் தொழில் வர்த்தகத் துறையினருக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

மேற்கு ஆசியாவில் இனவெறி இஸ்ரேல், ஏகாதிபத்திய அமெரிக்கா தான்தோன்றித்தனமாக ஈரான் மீது போர் தொடுத்ததால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகளையும், நெருக் கடிகளையும் ஏற்படுத்தி வருகிறது.

அதில் முக்கியமாக இந்தியாவுக்கான எரிபொருள் வரத்தும் பாதிப்பை சந் திக்கிறது.

இதனால் போர் தொடங்கிய சூழலில் பெட்ரோலியத்தை அடிப் படையாகக் கொண்டு தயாரிக்கப்ப டும் பொருட்கள் விலையேற்றம் எரி வாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

ஒன்றிய அரசு எரிவாயு தட்டுப் பாடு இல்லை, விநியோகம் சீராக நடைபெறுவதாக அறிவித்த போதும், தொழில், வர்த்தகத் துறையினருக்கு இதனால் பலவித பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது.

இது குறித்து என்.டி.எல்.இ.(வீட்டு உபயோகத்திற்கு இல்லாத, அத்தியா வசியம் இல்லாத) எல்பிஜி விநி யோகஸ்தர்கள் சங்கத்தின் தேசியத் தலைவர் பி.மகேந்திரன் கூறியதாவது: தற்போது வழக்கத்தை விட வணிக அடிப்படையிலான எரிவாயு சிலிண்டர் வரத்து 50 சதவிகிதம் அளவில் உள் ளது.

தற்போது சீரான நிலை இருந் தாலும் வரத்து குறைவுடன், விலை யும் உயர்ந்திருப்பது 20 முதல் 30 சதவி கிதம் தொழில் துறை எரிவாயு பயன் பாட்டை பாதித்துள்ளது.

குறிப்பாக தொழில் துறையில் இந்த விலை உயர்வு அவர்களது உற்பத்திச் செலவை அதிகரிப்பதால் கட்டுப்படி யாகாத நிலை உள்ளதாக கூறுகின்ற னர்.

குறிப்பாக சிறு, குறு தொழில் துறை யினர்தான் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர். முன்பெல்லாம் கடனுக்கு சிலிண் டரை வழங்குவோம்.

இப்போது தட்டுப் பாடான நிலையில் கடனுக்கு கொடுப் பதை நிறுத்தி விட்டோம்.

100 சதவிகி தம் பணம் கொடுத்துத்தான் சிலிண்டர் வாங்க வேண்டும் என வாடிக்கையா ளர்களிடம் தெரிவித்து விட்டோம், என்று கூறினார்.

நுகர்வு குறைகிறது அதேபோல் திருப்பூர் மாவட்ட எல்பிஜி விநியோகஸ்தர்கள் சங்கத் துணைத் தலைவர் கோவர்த்தனா சிவா னந்த வடிவேல் கூறுகையில், பதிவு பெற்ற தொழில் வர்த்தகத் துறை வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே சிலிண்டர் விநியோகம் செய்ய வேண் டும் என ஒன்றிய அரசு வரையறுத்துள் ளது.

எனவே அத்தகைய சரியான வாடிக்கையாளர்களுக்குத் தான் எரி வாயு சிலிண்டர் கொடுத்து வருகி றோம்.

அவசர, அவசியத் தேவைக் காக அவர்கள் எரிவாயு சிலிண்டர் வாங்கிச் சென்றாலும் விலை குறைந் தால் பரவாயில்லை என்று கூறுகின்ற னர். சிலிண்டர் விலையேற்றத்தினால் சுமார் 20 சதவிகித அளவுக்கு வாடிக் கையாளர்கள் நுகர்வை குறைத்துக் கொண்டுள்ளனர்.

அதே போல் பதிவு செய்யாத சிறு அளவில் தொழில் செய் வோர் எரிவாயு சிலிண்டர் பெறுவதற்கு முறைப்படி ஆர்.சி.பதிவு செய்து கொள்ளும்படி வலியுறுத்துகிறோம்.

தற்போது தட்டுப்பாடான நிலை என்று சொல்ல முடியாது.

இருப்பினும் நிச்ச யமற்ற நிலை இருப்பதால் வரக்கூடிய காலத்தில் என்ன நடக்கும் என்று தெரி யவில்லை, என்று கூறினார்.

தாக்குப்பிடிக்க முடியவில்லை அதேபோல் அவிநாசி ஹோட்டல், பேக்கரி, ஸ்வீட் தயாரிப்போர் சங்கத் தலைவரும், திருப்பூர் மாவட்ட ஹோட் டல் சங்க செயற்குழு உறுப்பினருமான ஆர்.பூபதி கூறுகையில், எரிவாயு சிலிண்டர் விலையேற்றம், தட்டுப் பாடு காரணமாக உணவகங்கள், பேக் கரிகள், இனிப்பகங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் 19 கிலோ கொண்ட வணிக அடிப்படையி லான எரிவாயு சிலிண்டர் ரூ.1770க்கு விற்பனையானது.

அதன் பிறகு ரூ.2400க்கு விலை உயர்ந்தது. இப் போது ரூ.3400 என அதிகரிக்கப் பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு உணவகங்கள், பேக்கரிகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாததா கும். இதனால் உணவகம் ஒன்றில் வாரத்திற்கு 10 சிலிண்டர் வாங்கும் நிலை மாறி தற்போது வாரம் 1 சிலிண் டர் மட்டுமே வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

இதற்கு மாற்றாக விறகு, மின்சார அடுப்பு ஆகியவற்றை பயன்படுத்து கிறோம். கோவை அன்னபூர்ணா, ஹரி பவன், ஜூனியர் குப்பண்ணா, ராயல் உடுப்பி போன்ற பெரிய உணவகங்கள் உணவுப் பொருட்கள் விலைகளை உயர்த்தியுள்ளனர்.

ஆனால் அதேசம யம் சிறிய அளவிலான கடைகளில் ஏற்கெனவே வியாபாரம் குறைவாக இருக்கும் நிலையில் விலைகளை உயர்த்தினால் வாடிக்கையாளர்கள் வரமாட்டார்கள் என்பதால் சமாளித்து, நஷ்டத்தில் தொழில் நடத்த வேண்டிய நிலை உள்ளது.

அதேபோல் வாரம் முழுவதும் முழு நேரம் உணவகங்கள் நடத்தி யோர் இப்போது தினமும் காலை, மதி யம் அல்லது இரவு என ஏதேனும் ஒரு வேளை மட்டும் உணவகம் செயல் படும் நிலைக்கு மாற்றியுள்ளனர்.

பெரிய கடைகளில் இருந்து சிறிய உணவகங்கள் வரை 20, 25 உணவு வகைகள் தயாரிப்பது தற்போது சுமார் 10 வகைகள் என்ற அளவுக்கு குறைத்து விட்டனர்.

அதேபோல் வாரம் ஓரிரு முறை என மாதம் ஐந்தாறு முறை உண வகங்களுக்கு வந்து சாப்பிடும் குடும் பத்தார் கட்டண உயர்வு காரணமாக உணவகத்துக்கு வருவதையும் குறைத்துக் கொண்டனர். கல்யாணம் போன்ற விசேசங்களுக்கு ஆர்டர் எடுப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு வருக்கு ரூ.150 என நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை எரிவாயு சிலிண்டர் விலையேற்றம் காரணமாக ரூ.170 என உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது.

மின் அடுப்பு இது மட்டு மின்றி சிலிண் டர் தட் டுப்பாடு காரணமாக விறகு, மின் சார அடுப்புகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

உணவ கங்களில் விறகு அடுப்புகளில் சமைப் பதால் பாத்திரங்கள் கரி பிடிக்கின்றது. சமையலறையிலும் அதிகளவில் புகை ஏற்படுகிறது.

எனவே சமை யலர்கள் விறகு அடுப்பு வெப்பத்தில் வேலை செய்வதால் சம்பளத்தை அதி கரித்து கேட்கின்றனர்.

பாத்திரங் களைத் தூய்மைப்படுத்தும் பெண் களும் கரி பிடித்த பாத்திரங்களைக் கழுவுவதற்கு கூடுதல் கூலி கேட்கின்ற னர்.

தினமும் ரூ.800 - ரூ.900 சம்பளம் வாங்கிய சமையலர்கள் தற்போது இதனால் ரூ.1200 வரை உயர்த்தி வாங்குகின்றனர்.

பெண் தொழிலாளர் கள் ஒரு நாளைக்கு ரூ.350 வாங்கி யோர் தற்போது ரூ.600 வரை வாங்கு கின்றனர்.

இந்த பிரச்சனை தீர்வதற்கு எரி வாயு சிலிண்டர் தட்டுப்பாடு இல்லா மல் கிடைக்க வேண்டும். இது இப் போது நம் கையில் இல்லை.

எனினும் மின் அடுப்புகளை பயன்படுத்துவ தற்கு மின் கட்டணத்தைக் குறைக்க வேண்டும். வரி உட்பட ஒரு யூனிட் டுக்கு ரூ.25 வரை செலவிட வேண்டி யிருக்கிறது.

எனவே மின் கட்டணத் தைக் குறைத்தால் எங்களுக்கு உதவி யாக இருக்கும்.

இந்த நெருக்கடி நிலை காரணமாக அவிநாசி வட்டாரத்தில் இருக்கக் கூடிய 250 உணவகம், பேக்கரிகளில் சுமார் 40 கடைகள மூடப்பட்டு விட்டன.

இதே நிலைதான் திருப்பூரிலும் இதே போல் தான் சிறிய அளவிலான உண வகங்கள், பேக்கரிகள் ஏராளமாக மூடப்பட்டு உள்ளன.

தற்போது தேர் தல் நடைபெறுவதால் விலை உயர்வு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.

தேர்தலுக்குப் பின் விலை உயர்வு அதிகரிக்கும் என்று டெல்லி நண்பர்கள் கூறினர்.

சூரிய சக்தியைப் பயன்படுத்துங்கள் என்று யோசனை சொல்கிறார்கள். தற்போது நஷ்டத் தில் தொழில் நடத்திக் கொண்டிருக் கிறோம்.

எங்களுக்கு வேறு தொழிலும் தெரியாததால் ஓட்டிக் கொண்டிருக் கிறோம் என்று பூபதி கூறினார்.

விறகு விலையும் உயர்ந்துள்ளது தமிழ்நாடு கேட்டரிங் சங்க உறுப் பினர் கீரனூர் சி.கே.காளிமுத்து கூறு கையில், எங்களைப் பொருத்தவரை வாடிக்கையாளர்கள் மண்டபத்தில் சிலிண்டர் வாங்கித் தந்தால் சமையல் செய்து தருவோம்.

ஆனால் சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கிறது. இந்த பிரச் சனையால் வேலைவாய்ப்பு பாதிக்கப் படுகிறது.

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ.2000 வரை கொடுத்து சிலிண்டர் வாங்க வேண்டிய நிலை உள்ளது.

இப்பிரச் சனையால் கேட்டரிங் தொழில் செய் வோர் விறகுகளை பயன்படுத்துவதும் உள்ளது.

தொழில் வாய்ப்பும் குறை கிறது என்று கூறினார்.

திருப்பூர் ரைசிங் சங்கத் தலைவர் கருணாம்பிகா ராமசாமி கூறுகையில், பின்னலாடை தொழிலைப் பொருத்த வரை பல ஜாப் ஒர்க்குகளில் வெப் பத்தை பயன்படுத்தி பிராசசிங் செய்ய வேண்டிய நிலைகள் உள்ளன.

இங் கெல்லாம் சிலிண்டர்கள் பயன்படுத்து வதால் விலை ஏற்றம், எங்களுக்கான உற்பத்திச் செலவை அதிகரிக்கிறது.

ஏற்கெனவே கட்டுப்படியான விலை கிடைக்காமல் தொழில் செய்யும் நிலை யில் சிலிண்டர் விலை உயர்வும் எங்க ளுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

எரிவாயு ஆற்றலுக்கு பதி லாக விறகுகளைப் பயன்படுத்தலாம் என மாறினால், விறகு விலையும் ஏறி யுள்ளது.

முன்பு ஒரு டன் ரூ.4700 என்று இருந்த விறகு விலை தற்போது ரூ.6000 வரை உயர்ந்து விட்டது.

மேற்காசிய போரினால் எரிவாயு தட்டுப்பாடு ஏற் படுவதைப் புரிந்து கொள்ள முடி கிறது.

ஆனால் இந்த நெருக்கடி நிலை யைப் பயன்படுத்தி விறகு விலையை யும் கூட்டுகின்றனர். இது தொழில் துறையை தான் பாதிக்கிறது.

எங்கள் நிறுவன கேன்டீனில் 60 பேர் சாப்பிடுகின்றனர்.

அங்கு சிலிண் டர் தட்டுப்பாடு, விலையேற்றத்தால் விறகு அடுப்பைப் பயன்படுத்து கிறோம் என்று தெரிவித்தார்.

இரண்டு மாத காலத்திற்கு எரிவாயு சப்ளை தயார் நிலையில் இருக்கிறது என்று அரசு சொன்னாலும், சந்தையில் தட்டுப்பாடு இருக்கிறது என கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

சிறு தொழில் செய்யும் எங்கள் நிலை யும் நலிவடைந்துள்ள விவசாயிகள் நிலையைப் போலவே ஆகிவிட்டது என்று வேதனையுடன் கூறினார் கரு ணாம்பிகா ராமசாமி.

டீமா சங்கத் தலைவர் எம்.பி.முத்துரத்தினமும், தொழில் துறை தொடர்ந்து அடுத்தடுத்து பாதிப்புகளை சந்தித்து வருகிறது.

எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு, விலையேற்றமும் இந்த துறைக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது.

ஒட்டுமொத்த நெருக்கடியால் தொழில் மையங்களில் ஒவ்வொரு நாளும் ஏதேனும் சில தொழிற்சாலை கள் மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் அவர் கூறினார். திருப்பூர், அவிநாசி, பல்லடம் என இந்த வட்டாரத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பனியன் தொழில் நிறுவனங்கள் விடுதிகளில் தங்க வைத்து வேலை வாங்குகின்றனர்.

அவர்கள் சமைத்து சாப்பிடுவதற்கு வர்த்தக சிலிண்டர் வாங்கிப் பயன்ப டுத்தும் நிலையில் அவை விலை ஏறி, தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பாதிப்பை சந்திப்பதாகவும் தொழில் துறையினர் கூறினர்.

மேலும் எரிவாயு அடிப்படையில் இயங்கும் காரையும் கடந்த ஒன்றரை மாதமாக எரிவாயு நிரப்ப முடியாத நிலையில் சும்மா நிறுத்தி வைத்திருப்ப தாக அதன் உரிமையாளர் தெரிவித் தார்.

ஆக எரிவாயு பயன்பாடு என்பது கிட்டத்தட்ட எல்லோரும் பயன்படுத்த வேண்டிய அத்தியாவசியப் பொரு ளாக இருக்கும் நிலையில், பல தரப் பினரும் வெவ்வேறு விதமான பாதிப்பு களை சந்தித்து வருகின்றனர்.

எனவே ஒன்றிய அரசு இந்த எரிவாயு தேவைக்கு ஏற்ப உரிய கொள்கையை வகுத்து தொழில், வர்த்தகத் துறை யினருக்குத் தேவையான எரிவாயு சீராக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண் டும் என அனைத்துத் தரப்பினரும் எதிர் பார்க்கின்றனர்.