வணிக எரிவாயு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்திய மோடி அரசு!
1 Jun 2026, 8:56 pm
<p><strong>வணிக எரிவாயு சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்திய மோடி அரசு!</strong></p><p>புதுதில்லி, ஜூன் 1 - வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை யை, ஒன்றிய பாஜக அரசு மேலும் 46 ரூபாய் உயர்த்தியுள்ளது. வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை கடந்த மாதம் தான், ஒரேயடியாக, ஒரு சிலிண்ட ருக்கு 990 ரூபாய் 50 காசுகள் அள விற்கு மோடி அரசு உயர்த்தியது. இதனால், வணிகப் பயன்பாட்டு சமை யல் எரிவாயு சிலிண்டர் விலை 3 ஆயி ரத்து 237 ரூபாய் என்ற உச்சத்திற்குச் சென்றது. இது, உணவகங்கள், தேநீர் கடைகள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நடத்துவோருக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. ஏற்கெனவே, எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ஹோட்டல் கள் உள்ளிட்ட நிறுவனங்கள் இழுத்து மூடப்பட்ட நிலையில், சிலிண்டர் விலை உயர்வும் சேர்ந்து கொண்டது. இதனால், பல லட்சம் தொழிலாளர் கள், வேலையிழப்பு அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், வணிகப் பயன்பா ட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை யை மேலும் 46 ரூபாய் உயர்த்தி, புதிய தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. இதன்காரணமாக, சென்னையில் வணிக சிலிண்டர் விலை 3 ஆயிரத்து 283 ரூபாயாக உயர்ந்துள் ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் 928 ரூபாய் 50 காசுகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல், டீசல் விலையும் உயர்வு பெட்ரோல் - டீசல் விலையை, மோடி அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. அதன்படி சென்னையில், திங்களன்று பெட்ரோல் விலை லிட்ட ருக்கு 11 காசுகளும், டீசல் விலை லிட்ட ருக்கு 10 காசுகளும் உயர்த்தப்பட்டுள் ளது. பெட்ரோல் லிட்டர் 107 ரூபாய் 87 காசுகளுக்கும், டீசல் 99 ரூபாய் 65 காசுகளுக்கும் விற்பனை செய்யப் பட்டது.</p>
