முந்தய பக்கம்

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.11 உயர்வு!

1 Nov 2026, 9:16 pm
வணிகப் பயன்பாட்டுக்கான  சிலிண்டர் விலை மேலும் ரூ.11 உயர்வு!

வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.11 உயர்வு!

சென்னை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரானஇந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் நிர்ணயம் செய்து வருகின்றன.

அந்த வகையில், நவம்பர் மாதத்திற்கான புதிய விலை நிலவரங்களை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுஉள்ளன.

சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விலை ரூ.11 உயர்ந்து, ரூ.3,016.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2கிலோ எடைக் கொண்ட வீட்டு உபயோக சமையல்எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இது தொடர்ந்து ரூ.957.50 என்ற விலையிலேயே விற்பனையாகிறது.மேற்காசியப் போர் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயரத் தொடங்கியது. இதனால், அக்.1 ஆம் தேதியன்றுவணிகப் பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்த்தப்பட்ட நிலையில், நவம்பர் மாதத்தில் மேலும் ரூ.11 அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram