வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்வு!
1 Oct 2026, 1:23 pm
<p>சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்துள்ளது.</p><p>சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயித்து அறிவிப்பு வெளியிடுகின்றன.</p><p>அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.66.50 உயர்ந்து தற்போது ரூ.2,984-க்கு விற்பனை செய்யப்படுகிறது. </p><p>அதேசமயம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.</p>
