தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வணிக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு இடதுசாரிக் கட்சிகள் - விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!

7 May 2026, 9:44 pm
வணிக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு இடதுசாரிக் கட்சிகள் - விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!

வணிக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு இடதுசாரிக் கட்சிகள் - விசிக கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை, மே 7 - வணிக எரிவாயு விலையை தொடர்ந்து சமையல் எரிவாயு விலை யும் உயரும் அபாயம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார். ஒன்றிய அரசின் வணிக எரிவாயு விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்களை ஒழிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று (மே 7) சென்னை சுங்க அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம், சிபிஐ, சிபிஐஎம்எல்-லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சி கள் மற்றும் விடுதலை சிறுத்தை கள் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கா னோர் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டனம் முழங்கினர். எரிவாயு சிலிண்டர் விலைகளை குறைக்க வேண்டும்; மக்களின் சுமையைக் குறைக்க மானி யம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற போராட்டங்களில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, வணிக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, ரயில்வே பணி யிடங்கள் ஒழிப்புக்கு கண்டனம் தெரி வித்தனர்.

எரிவாயு சிலிண்டர் மானியத்தை வழங்க வேண்டும் : பெ.சண்முகம் பேச்சு

இடதுசாரிக் கட்சிகள் - விசிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெ.சண்முகம் பேசியதாவது: அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது.

எண்ணெய் வளங்களை கொள்ளையடிக்க நடத்தப்பட்ட இந்த போரில் வளைகுடா நாடுகளையும் அமெரிக்கா இழுத்து விட்டது.

இதனால் பெட்ரோலியப் பொருட் களின் விலை உயர்ந்துள்ளது. வணிக எரிவாயு வை தொடர்ந்து, வீட்டுப் பயன்பாட்டிற்கான சமை யல் எரிவாயு விலையும் உயரும் அபாயம் உள்ளது.

ஏற்கெனவே, புலம்பெயர் தொழிலா ளர்கள், சிறுவியாபாரிகள் பயன்படுத்தும் 5 கிலோ சிலிண்டர் விலையை 261 ரூபாய் உயர்த்தி உள்ளனர்.

அப்படியானால் 14 கிலோ சமையல் எரிவாயு விலை என்னவாகும்? வணிக எரிவாயு விலை உயர்வால் உணவுப் பொருட்களின் விலை 100 சதவிகிதம் உயர்ந்துள்ளது. 10 ரூபாய் வடை 20 ரூபாயாக மாறிவிட்டது.

ஹோட்டல்களில் சாப்பிடும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தொழிலை நடத்த முடியாமல், மாநிலம் முழு வதும் பல்லாயிரக் கணக்கான ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாகவும், ஆப் (செயலிகள்) மூலம் உணவு விநியோகம் செய்யும் கிக் தொழிலாளர்களும் வேலை யிழந்துள்ளனர். 2012-இல் சர்வதேச சந்தையில் 112 டாலரி லிருந்து 44 டாலராக கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

அப்போது விலைக்குறைப்பின் லாபத்தை மோடி அரசானது மக்களுக்கு தர வில்லை. பெட்ரோலியப்பொருட்களின் விலை யை குறைக்கவில்லை.

சமையல் எரிவாயு விற்கு கொடுத்த மானியத்தையும் நிறுத்தி விட்டார்கள்.

தற்போது விலைகள் உயர்த்தப் பட்டுள்ள நிலையில், மக்கள் பயன்படுத்தும் அத்தி யாவசியப்பொருட்களுக்கு மானியம் வழங்க வேண்டும். மாறாக விலையேற்றத்தை மக்களின் தலையில் ஒன்றிய அரசு சுமத்தக் கூடாது.

இந்தப் போராட்டத்தை விரிவாக நடத்துவோம். மோடி பதவியேற்ற பிறகு 4.25 லட்சம் ரயில்வே பணியிடங்களையும், ஒன்றிய அரசில் இருந்த 4 லட்சம் பணியிடங்களையும் ஒழித்து விட்டனர்.

இந்தாண்டு ரயில்வே-யில் மேலும் 30 ஆயிரம் பேர் பணியிடங்களை ஒழிக்க உத்தரவிட்டுள்ள னர். ரயில்வே துறை பன்மடங்கு வளர்ந்துள்ளது. அதற்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

புதிய தொழில்நுட்பங்கள் வளரும் போது உழைப்பின் அளவை குறைக்கவேண்டுமே தவிர, வேலையிலிருந்தே தொழிலாளர்களை நீக்குவதை அனுமதிக்க முடியாது.

இந்தியாவில் வேலையின்மை பெரும்பிரச்சனையாக உள்ளது. எனவே, வேலைவாய்ப்புகளை பெருக்கும் வகையில் அரசின் கொள்கைகள், திட்டங்களை வகுக்க வேண்டும்.

பணியிடங்களை அழிப்பது மனிதகுலத்திற்கு விரோதமானது. எனவே, ரயில்வே வாரியம், தனது உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். மு. வீரபாண்டியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டி யன் பேசுகையில், “கச்சா எண் ணெய்யை இந்தியா வாங்கி தனியாருக்கு கொடுக்கிறது. தனியார் விலை நிர்ண யம் செய்கின்றனர்.

இதனால் விலை உயர்கிறது. இதனை மாற்றி விலையை அரசே தீர்மானிக்க வேண்டும். கச்சா எண்ணெய் விலையேற்றத்திற்கு முதல் காரணம் அமெரிக்கா. இரண்டா வது காரணம் ஒன்றிய பாஜக அரசு.

கார்ப்பரேட்டுகளை கட்டுக்குள் வைத்து, உள்ளூர் தொழில்களை ஊக்குவிக்காமல் வேலையின்மையை ஒழிக்க முடியாது. ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டம் தொடரும்.

எதிர்காலத்தில் உழைக்கும் மக்களின் போராட்டம் இன்னும் வலுப்பெறும்” என்றார்.

தொல். திருமாவளவன் எம்.பி. விசிக தலைவர் தொல். திருமா வளவன் எம்.பி. பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு உழைக்கும் மக்களுக்கு எதிராக கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது.

வணிக எரிவாயு விலை உயர்வால் நாடு பின்னோக்கி செல்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது ஒருமுறை கூட பெட்ரோலியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டது இல்லை.

இது சுரண்டல். பணியிடங்களை அழிப்பது நுட்பமான அரசியல். எனவே, மக்க ளை அரசியல்படுத்த வேண்டும்.

அப்போதுதான் அநீதிக்கு எதிராக கோவப்படுவார்கள். இதுதான் வாக்கு அரசியலுக்கும், முற்போக்கு அர சியலுக்கும் உள்ள வேறுபாடு. எனவே, மக்களை அரசியல்படுத்துவோம்” என்றார்.

தமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசிய தொல். திருமாவளவன் எம்.பி. “இடதுசாரிகளும், விசிகவும் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்று நாடே எதிர்பார்க்கிறது. பலரும் பலவிதமாக ஆசைக் காட்டுகிறார்கள்.

யூகங்களை செய்திகளாக்குகிறார்கள். எது சரியோ, எதை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இடது சாரிகளுடன் இணைந்து முடி வெடுப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.