முந்தய பக்கம்

வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு!

1 Apr 2026, 6:24 am
வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்வு!
<p>சென்னையில் வணிக சிலைண்ட விலை ரூ.203 உயர்ந்து ரூ.2,246க்கு விற்பனையாகிறது<br /> மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையேயான போர் காரணமாக எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாக, வணிக பயன்பாட்டுக்கான எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.<br /> சென்னையில் 19 கிலோ எடையுடைய வணிக சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்து, ரூ.2,043 இலிருந்து ரூ.2,246 ஆக அதிகரித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வு ஹோட்டல்கள், உணவகங்கள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.<br /> ஏற்கனவே கடந்த மார்ச் 1-ஆம் தேதி 19 கிலோ வணிக சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குறுகிய கால இடைவெளியில் விலை உயர்வுகள் ஏற்பட்டுள்ளதால், வணிக வளாகங்கள் கவலை தெரிவித்துள்ளன</p>
Share
FacebookXWhatsAppTelegram