தடகள போட்டியில் முதலிடம் பிடித்த ஓய்வுபெற்ற எஸ்பிக்கு பாராட்டு
1 Jan 2026, 4:52 pm
<p><strong>தடகள போட்டியில் முதலிடம் பிடித்த ஓய்வுபெற்ற எஸ்பிக்கு பாராட்டு</strong></p>
<p>சிதம்பரம், ஜன.1- சிதம்பரத்தில் தடகள போட்டிகளில் முதலிடம் பிடித்த ஓய்வு பெற்ற எஸ்பிக்கு, தமிழ்நாடு காவலர் நலச்சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் தென்னிந்திய அளவிலான 3-வது மூத்தோர் தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த டிச.13,14 தேதி களில் நடைபெற்றது. இப்போட்டியில், 65 வயது பிரிவில் நடைபெற்ற 100, 200, 400 மீட்டர் ஓட்ட பந்த யத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பாது காவலரும், ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாள ருமான எஸ்.அப்துல்கனி முதல் இடம் பிடித்து மூன்று தங்கபதக்கங்களை வென்றார். தங்க பதக்கங்கள் பெற்ற அவ ருக்கு சிதம்பரத்தில் தமிழ்நாடு காவலர் நல சங்கம் சார்பில் பாராட்டு விழா வியாழக்கிழமை நடை பெற்றது.இவ்விழாவிற்கு ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் டி.கண்ணன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகி ஆர்.காசி நாதன் வரவேற்றார். இக்கூட்டத்தில் எஸ்.அப்துல்கனி தமிழ்நாடு காவலர் நலசங்க நிர்வாகி கள் சுப்ரமணியன், ஞான பிரகாசம், கிருஷ்ணவேணி மற்றும் காவல்துறை ஓய்வு பெற்ற அதிகாரிகள் காவ லர்கள் பொன்னாடை அணி வித்து பாராட்டி வாழ்த்துரை யாற்றினர். மதிவாணன் நன்றி கூறினார்.</p>
