பணிநிறைவு பாராட்டு விழா
1 Apr 2026, 4:02 pm
<p><strong>பணிநிறைவு பாராட்டு விழா</strong></p>
<p>நாகர்கோவில்,ஏப்.1- தமிழ்நாடு அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்ட மைப்பு சார்பில் ஆசிரியர் அலுவலர்களுக்கான பணி நிறைவு பாராட்டு விழா சுங்கான்கடை புனித சவேரி யார் கத்தோலிக்க பொறியி யல் கல்லூரியில் நடை பெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட் டத் தலைவர் ரைமன்ட் தலை மை வகித்தார். மகளிர் அணி பொறுப்பாளர் சாந்தி, கார்மல் பெலிசிட்டா மேரி ஆகியோர் வரவேற்றனர். மாநிலத் தலைவர் கண்ணன் உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் டோமினிக் ராஜ், மாவட்ட பொருளாளர் சாந்த சீலன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். நாகர்கோவில் முதன் மை சார்பு நீதிபதி ஜெய் சங்கர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சிறப்புரை யாற்றினார். அகஸ்டஸ் சிங் நன்றி கூறினார்.</p>
