புரட்சியாளர் லெனின் நினைவு தினம் அனுசரிப்பு
21 Jan 2026, 3:58 pm
<p><strong>புரட்சியாளர் லெனின் நினைவு தினம் அனுசரிப்பு</strong></p>
<p>தருமபுரி, ஜன.21- ரஷ்ய புரட்சியாளர் மாமேதை லெனின்-னின் நினைவுதினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது. சோவியத் யூனியனில், ஜார் மன்னனின் சர்வதிகாரத்தை ஒழித்து, பட்டாளி மக்கள் அரசாங்கத்தை நிறுவிய ரஷ்ய புரட்சியாளர் மாமேதை லெனின்-னின் நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் சிபிஎம் வட்டச் செயலாளர் காரல் மார்க்ஸ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கோவிந்தசாமி, விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் ஜி.நக்கீரன், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
