தோழர்கள் மாரிமுத்து சகோதரர்கள் நினைவேந்தல்
25 Jan 2026, 6:29 pm
<p><strong>தோழர்கள் மாரிமுத்து சகோதரர்கள் நினைவேந்தல்</strong></p>
<p>தருமபுரி, ஜன.25- பென்னாகரம், மல்லாபுரம் தோழர்கள் எம்.மாரிமுத்து, எம். மணி, எம்.விஸ்வநாதன் ஆகியோ ரின் 28 ஆம் ஆண்டு நினைவுதினம் ஞாயிறன்று அனுசரிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பென்னா கரம் வட்டாரத்தில் ஏழை எளிய மக்களுக்காக போராடியவர் தோழர் எம்.மாரிமுத்து. இவர் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் விவசாயிகள் சங்கம் ஆகியவற்றில் பலவேறு பொறுப்புகளை வகித்தவர். குத்தகை விவசாயிகளுக்காக தொடர் போராட்டம் நடத்தியவர். மல்லாபுரம் கிராம ஏழை மக்க ளுக்கு போராடி நிலத்தை பெற்று தந்தவர். பல்வேறு மக்கள் போராட் டங்களை முன்னெடுத்ததால் பல் வேறு சதி வழக்குகளை எதிர் கொண்டார். மக்கள் போராட்டங் களை முன்னின்று நடத்தியதை பொறுத்துக்கொள்ளாத சமூக விரோதிகள், தோழர் எம்.மாரிமுத்து மற்றும் அவரது இரண்டு சகோ தரர்களை படுகொலை செய்தனர். இவர்களது நினைவை போற்றும் வகையில், பென்னாகரத்தில் உள்ள இவர்களது நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஞாயிறன்று நினைவஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மாதன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசு பாலன், மூத்த தலைவர் பி.இளம் பருதி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.மாரிமுத்து, சோ.அருச் சுனன், வே.விஸ்வநாதன், ஜி.சக்தி வேல், ஒன்றியச் செயலாளர்கள் ஆ. ஜீவானந்தம், எம்.தங்கராஜ், சக்தி வேல், பென்னாகரம் நகரச் செயலா ளர் பி.ஆர்.செல்வம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.குமார், கே. அன்பு, வி.ரவி மற்றும் தோழர் மாரி முத்து குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.</p>
