முந்தய பக்கம்

செகுடந்தாளி முருகேசன் நினைவேந்தல்

18 Nov 2025, 3:21 pm
செகுடந்தாளி முருகேசன் நினைவேந்தல்
<p><strong>செகுடந்தாளி முருகேசன் நினைவேந்தல்</strong></p> <p>கோவை, நவ.18- சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேசனின் நினைவுதினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. கோவை மாவட்டம், சூலூர் அருகேயுள்ள செகு டந்தாளி கிராமத்தில், சாதி ஒழிப்பு போராளி செகுடந்தாளி முருகேச னின் 26 ஆம் ஆண்டு நினைவுதினம் திங்க ளன்று அனுசரிக்கப்பட்டது. கருமத்தம்பட்டி யிலுள்ள அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் வீரவ ணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் ப.மகேஸ்வரன், செயலா ளர் டி.நாகராஜ், பொருளாளர் சுப்பிரமணி யன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தெய்வேந்தி ரன், சூலூர் தாலுகா செயலாளர் சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின் குமார், ரவீந்திரன், வாலிபர் சங்க தாலுகா செயலாளர் குருசாமி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram