தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவேந்தல்

19 Jan 2026, 2:23 pm
தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவேந்தல்
<p><strong>தியாகிகள் அஞ்சான், நாகூரான், ஞானசேகரன் நினைவேந்தல்</strong></p> <p>உதகை, ஜன.19- பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உயிர் நீத்த தியாகிகளின் 44 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று அனுசரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவில் பல்வேறு கோரிக்கைகளுக்காக 1982 ஆம் &nbsp;ஆண்டு முதல் பொது வேலை நிறுத் தம் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட அஞ்சான், நாகூரான், ஞானசேக ரன் ஆகியோர், காவல் துறையின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த னர். இந்த தியாகிகள் 44 ஆம் &nbsp;ஆண்டு நினைவு தினம் திங்களன்று &nbsp;அனுசரிக்கப்பட்டது. நீலகிரி மாவட் டம், மஞ்சூரில் தியாகிகள் தின &nbsp;சிறப்பு கூட்டம், சிஐடியு சார்பில் &nbsp;நடைபெற்றது. சிஐடியு மாவட்டப் பொருளாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார். இதில் விவசா யிகள் சங்க மாவட்டத் தலைவர் என்.வாசு, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.ராஜரத்தினம், டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ஜே.ஆல் தொரை, விவசாயிகள் சங்க மாவட் டக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகாக்குழு உறுப்பினர் சுப்பிர மணி, கிளைச் செயலாளர் அலியார் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தருமபுரி சிஐடியு, விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தி முழக்கமிட்டனர். இந் நிகழ்ச்சிக்கு சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் மாவட் டத் தலைவர் சி.கலாவதி, இணைச் செயலாளர் ஏ.சேகர், போக்குவ ரத்து சங்க மண்டல துணைத்தலை வர் சி.முரளி, மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் பி.ஜீவா, மாவட்டச் செயலாளர் தீ. லெனின் மகேந்திரன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் சி.சண்முகம், ஏ.முருகேசன், சி.கவிதா, ராஜம் மாள், லில்லிபுஷ்பம், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சோ. அருச்சுணன், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஜெயா உட்பட திரளா னோர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் டாஸ்மாக் குடோன் வளாகப் பகுதியில் நடைபெற்ற தியாகிகள் நினைவு தின நிகழ் விற்கு, டாஸ்மாக் சங்க நிர்வாகி பெருமாள் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் என். வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். இதில், போக்குவரத்து சங்க தலை வர் பாண்டியன், டாஸ்மாக் குடோன் சங்க பொருளாளர் செந்தில், சங்க &nbsp;நிர்வாகிகள் செல்வம், வெங்க டேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை கோவை, ஒண்டிபுதூர் சுங்கம் மைதானத்தில் நடைபெற்ற தியாகி கள் நினைவேந்தல் நிகழ்விற்கு, சிஐ டியு மாவட்டக்குழு உறுப்பினர் ப. சுப்பிரமணி தலைமை வகித்தார். நினைவு ஸ்தூபிக்கு, சிஐடியு மாவட் டச் செயலாளர் எஸ்.கிருஷ்ண மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட் டச் செயலாளர் வி.ஆர்.பழனிச் சாமி உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ் வில், சிபிஎம் நகரச் செயலாளர் ஆர். மூர்த்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட் சித்துறை ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் கே.ரத்தினகுமார், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆனந்தகுமார், போக்குவ ரத்து ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் மகேஷ்குமார் உட்பட &nbsp;பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று, பொள்ளாச்சியி லுள்ள அரசு போக்குவரத்து ஓட்டு நர் பயிற்சிப்பள்ளி அலுவலகம் முன்பு நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்விற்கு, சிஐடியு மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.சரவ ணன் தலைமை வகித்தார். விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, தாலுகா செய லாளர் ஸ்டாலின் பழனிச்சாமி, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ச.ஜெகநாதன், போக்குவரத்து ஊழியர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.