தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிப்பு

15 Dec 2025, 2:48 pm
தோழர் பி.ராமமூர்த்தி நினைவு தினம் அனுசரிப்பு
<p><strong>வேப்பத்தூரில் தோழர் பி. ராமமூர்த்தி &nbsp;38 ஆவது நினைவு தின செவ்வணக்கம்</strong></p> <p>கும்பகோணம், டிச.15- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், பெருந்தொழில்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்தவர், சமூக ஏற்றத் தாழ்வுகளை போக்கிட நாளும் உழைத்தவர், இந்திய தொழிற்சங்க மையத்தை உருவாக்கிய போராளி, தொழிற்சங்கத் தலைவர், தோழர் பி.ஆர். என்று அழைக்கப்படும் பி.ராம மூர்த்தியின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு, அவர் வாழ்ந்த இடமான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள வேப்பத்தூர் கிராமத்தில் அவரது இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு, சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். சேகர் தலைமை வகித்தார். ஜி. பக்கிரிசாமி, அம்சவல்லி முன்னிலை வகித்தனர். &nbsp;சிபிஎம் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், சிஐடியு தஞ்சை மாவட்டத் தலைவர் ஜெயபால், மாவட்டச் செயலாளர் கண்ணன், கைத்தறி சம்மேளன மாநிலச் செயலாளர் என்.&zwnj;பி. நாகேந்திரன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர். சங்க பொறுப்பாளர் சொக்கலிங்கம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். வாசு, எஸ். பழனிவேல், கும்பகோணம் நகரச் செயலாளர், செந்தில் குமார், மாமன்ற உறுப்பினர் செல்வம் உள்ளிட்ட சிஐடியு, சிபிஎம் உறுப்பினர்கள், ஓய்வூதியர்கள், சங்க பொறுப்பாளர்கள் புகழஞ்சலி வீர வணக்கம் செலுத்தினர். &nbsp;முன்னதாக சிபிஎம் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றிய கட்சி அலுவலகமான ராமமூர்த்தி நினைவரங்கத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஜெயபால், செங்கொடி ஏற்றி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன் ஆகியோர் தோழர் பி.ஆர். உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். &nbsp;அதேபோல், கும்பகோணம் அஞ்சுகம் நகரில் சிபிஎம் சார்பில், பி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். &nbsp;மன்னார்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபனத் தலைவர்களில் ஒருவரான அன்புத் தலைவர் தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு தினம், மன்னார்குடி நகர அலுவலகத்தில் கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகரச் செயலாளர் ஜி. தாயுமானவன் தலைமை ஏற்றார். உறுப்பினர் கே. பிச்சைக்கண்ணு, பி.ஆர். உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பி. ஜோதிபாசு, ஜி. ரகுபதி, டி.ஜெகதீசன், ஏ.பி. தனுஷ்கோடி, கே. பிச்சைக்கண்ணு, டி. சிவசுப்பிரமணியன், ஆட்டோ தொழிலாளர் சங்கம் மாவட்டச் செயலாளர் ஆ. &nbsp;ஹரிகரன், நகரத் தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர். &nbsp;பாபநாசம் மக்கள் பணியாற்றிய, உழைக்கும் மக்களின் ஒப்பற்றத் தலைவர் தோழர் பி. ராமமூர்த்தியின் நினைவு நாள் நிகழ்ச்சி, தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டையில் நடைபெற்றது. ஒன்றியக் குழு உறுப்பினர் கே. முனியாண்டி தலைமை வகித்தார். &nbsp;ஒன்றியச் செயலாளர் வி. ரவி, மாலை அணிவித்து, மரியாதை செய்தார். &nbsp;மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன் கொடியேற்றி வைத்து, தோழர் பி.ஆர்.ஐ நினைவு கூர்ந்து பேசினார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உட்பட கட்சித் தோழர்கள் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.