முந்தய பக்கம்

தோழர் பி.கே.சுகுமாரன் நினைவேந்தல்

13 Jan 2026, 3:17 pm
தோழர் பி.கே.சுகுமாரன் நினைவேந்தல்
<p><strong>தோழர் பி.கே.சுகுமாரன் நினைவேந்தல்</strong></p> <p>கோவை, ஜன.13- சிஐடியு கோவை மாவட்ட ஆட்டோ தொழி லாளர் சங்க ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.கே.சுகுமாரன் அவர்களின் நான்காம் ஆண்டு நினைவேந்த &nbsp;நிகழ்வு நடைபெற்றது. கோவை மாவட்டத் தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிதறி கிடந்த &nbsp;ஆட்டோ தொழிலாளர் களை ஒன்றிணைத்து வலு மிக்க ஆட்டோ தொழிலா ளர் சங்கமாக உருவாக்கி அதனை தமிழ கம் முழுவதும் விரிவுபடித்தி, மாநில ஆட்டோ &nbsp;தொழிலாளர் சம்மேளனமாக உருவாக்கிய வர்களில் முக்கியமானவர் பி.கே.சுகுமாரன். &nbsp;அவரது நான்காம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை பூ மார்க்கெட் ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலை மையகத்தில் நினைவேந்தல் நிகழ்வு செவ்வா யன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, சங்க மாவட்ட துணைத் &nbsp;தலைவர் என்.பாலன் தலைமை வகித்தார். &nbsp;இதில், ஆட்டோ சங்க கொடியை ஏற்றி, &nbsp;தோழர் பி.கே.சுகுமாரன் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து &nbsp;ஆட்டோ தொழிலாளர்களுக்காக அவர் &nbsp;ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவு கூர்ந்து மாவட்டத் தலைவர் ஆர்.செல்வம், மாவட்ட பொதுச்செயலாளர் எம்.கே.முத்துக் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட துணைத் தலைவர் பி.சி.முரு கன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.மாணிக் கவாசகம், மாவட்ட நிர்வாகிகள் கே.பழனியப் பன் எஸ்.காளீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட் டத் துணைத் தலைவர் த.நாகராஜன் நன்றி &nbsp;கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram