தோழர் என்.சங்கரய்யா நினைவு தினம் அனுசரிப்பு
15 Nov 2025, 4:09 pm
<p><strong>தோழர் என்.சங்கரய்யா நினைவு தினம் அனுசரிப்பு</strong></p>
<p>தருமபுரி, நவ.15- தோழர் என்.சங்கரய்யா-வின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் சனி யன்று அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முதுபெரும் தலைவரும், இந் திய விடுதலை போராட்ட வீரரும், தகைசால் தமிழருமான தோழர் என். சங்கரய்யா-வின் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று அனுசரிக் கப்பட்டது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியில் சிபிஎம் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ் வில், சங்கரய்யா-வின் உருவப் படத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியி னர் மலர்தூவி மரியாதை செலுத்தி னர். இந்நிகழ்வில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சுணன், வட்டச் செயலா ளர் தனுஷன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே. என்.மல்லையன், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் எஸ்.தீர்த்த கிரி, நிர்வாகிகள் சி.வஞ்சி. மனோக ரன், பொன்னுசாமி, குப்பன், இளவ ரசி, மாதையன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஈரோடு சிபிஎம் ஈரோடு மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ் விற்கு, கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஜி.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சுப் ரமணி, பி.சுந்தரராஜன், நகரச் செய லாளர் வி.பாண்டியன், நாமக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதே போன்று, பெருந்துறை அலுவலகத் தில் நடைபெற்ற நிகழ்விற்கு தாலுகா செயலாளர் ஆர்.அர்ச் சுணன் தலைமை வகித்தார். மாவட் டக்குழு உறுப்பினர் வி.ஏ.விஸ்வ நாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்டம், பெத்தநாயக் கன்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு, மூத்த தலைவர் எம்.ராமசாமி தலைமை வகித்தார். இதில் மூத்த தலைவர் எம்.ரெங்க சாமி, ஆ.கந்தன், க.பெருமா, க. காளிதாஸ், என்.மேதினம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கோவை மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க. கனகராஜ், மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, சங்கரய்யா-வின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரி யாதை செலுத்தினர்.</p>
<p> </p>
